பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 வேலைக்காரி அமிர்: என்னதான் காதலென்றாலும் கட்டுப்பாட்டை யும் காவலையும் மீறலாமான்னு கேட்பாங்களே... மூர்த்தி: அமிர்தம்! சொல் வேறு; செயல் வேறாக உள்ள சோம்பேறிகளிடம் உலகம் சிக்கிச் சீரழிகிறது. நாம் அந்தக் கொடிய சிறையிலிருந்து வெளியேறுகிறோம் சிரித் துக் கொண்டு. அமிர்தம்! நான் இன்றே சென்னை போகி றேன். அங்கு என் நண்பர்களின் உதவியைப் பெற்று உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரையிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அமீர்: என் பொருட்டு உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? மூர்த்தி: ரோஜாவைப் பறிக்கும்போது கூடத்தான் முள் தைக்கிறது கையிலே. இதெல்லாம் ஒரு கஷ்டமா? காட்சி 39. இடம்: அமிரதம் வீடு இருப்: முருகேசன், முத்தாயி, நண்பர். [அமிர்தம் வீட்டுக்கு வருகிறாள். அப்போது அவள் தகப்பனார் கோபத்துடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.] முரு: ஜாதி குலம் பார்க்காமே, இப்படிப் போற பொண்ணுங்களே வெட்டி வெட்டி வீச வேண்டாமா? வெள்ளரிக்காயா, * நண்: இந்தாப்பா, முருகேசா! வெட்டி வெட்டி வீசறதுக்கு? முரு: பின்னே என்னாங்க, மனுஷனுக்கு மானந்தாங்க பெரிசு. அதைப் போக்க எப்போ இந்தப் பொண்ணு துணிஞ் சிடிச்சோ, அப்புறம் எதுக்குங்க இருக்குது இந்த மீசை? முத்: என்னங்க! வந்த மனுஷன் கையைக்கூட நனைக் காமே, சும்மா வளவளன்னு பேசிக்கிட்டே இருக்கிறியே... முரு: போடி உள்ளே! இந்த விஷயத்தில் நீ தலையி டாதே! இரண்டிலே ஒண்ணு தீத்துக்கிட்ட பிறகுதாண்டி இந்த வீட்டிலே கையை நனைப்பேன்...