பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 79 நண்: இந்தாப்பா, முருகேசா! வா, வெளியிலே போயி சாவதானமா பேசலாம். நான் சொல்றபடி கேளு. விடியற துக்குள்ள பொண்ணெக் கூட்டிக்கிட்டு புதுப்பாளையத்துக் குப் போயிடு. அங்க நம்ப ஜாதியானா பார்த்து ஒருத்தனைக் கட்டிப் போட்டுட்டா தன்னாலே அடங்கிடும் அமிர்தம்! முரு: இதுவும் நல்ல யோசனைதானுங்க; நீங்க சொல்ற படியே வெடியிறதுக்குள்ளே பொண்ணை கூட்டிக்கிட்டுப் புதுப்பாளையத்துக்குப் போயிடுறேன். நண்: அப்படித்தான் செய். நான் வரட்டுமா? கோவத் திலே ஏதாச்சும் அது இதுன்னு செய்துடப் போற.. முரு: ஹூம்.. பெத்த பொண்ணு சீரில்லாததினாலே இந்த மாதிரி எல்லாம் வந்திருக்கு... [முருகேசன் பற்றவைத்த சுருட்டை. வீசி எறிகிறான். வீடு தீப்பற்றி எரிகிறது.] காட்சி-40 இடம்: சென்னை, நண்பர்களின் அறையில் மூர்த்தி. இருப்: மூர்த்தி, மற்றும் அவன் நண்பர்கள். 1வது நண்: மூர்த்தி! ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்கணும் என்கிறே.. பாதரை வேறே கோவிச்சிக்கிட்டு வந்திருக்கிறே... இதெல்லாம் என்கிரேஜ் பண்ண முடியாது. 2வது நண்: மூர்த்தி! என்னமோ விபரீத காரியம் செய் யிறே... முடியாதுன்னா முடியாதுதான். 3வது நண்: என்னைத் தொந்தரவு படுத்தாதே மூர்த்தி! இல்லைன்னா இல்லைதான்... இல்லை... இல்லை... இல்லை... இல்லை...!