பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 [இல்லையென்ற வேலைக்காரி பதிலுடன் திரும்பிய மூர்த்தி, அவன் கழுத்திலிருக்கும் பொன் செயின் ஞாபகத் திற்கு வரவே, அதை மார்வாடிக் கடையில் விற்று ரூபாய் 30 பெற்றுக் கொண்டு எங்கேயாவது அமிர் தத்துடன் காதல் வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பி வரு கிறான்.] மூர்த்தி: ஐயா! இங்கிருந்த முருகேச நாயக்கர் வீடு என்னவாயிற்று? ஒருவன்: அதெல்லாம் எரிஞ்சி சாம்பலா... போயிடுச் சிங்க... மூர்த்தி: அவர் மகள் அமிர்தம்...? ஒருவர் அந்த அம்மாளும் எரிஞ்சி சாம்பலா... போயிட் டாங்க! காட்சி--41 இடம்: ஹரிஹரதாஸ் ஆஸ்ரமம் இருப்: மூர்த்தி, ஹரிஹரதாஸ். சுந்தரகோஷ் (அமிர்தத்தின் முடிவையறிந்த மூர்த்திக்குத் தன் ஆவியின் துடிப்பை அடக்கமுடியாதவனாகி, சாந்தி வேண்டி ஒரு ஆஸ்ரமத்தில் சேருகிறான். அந்த ஆஸ்ரமத்துக்குக் குரு ஹரிஹரதாஸ்] ஹரி: குழந்தாய்! வா, என் அருகில். மூர்த்தி: சுவாமி நமஸ்கரிக்கிறேன். ஹரி: ஓ.தொடாதே யப்பா! தொடாதே!! பாழும் பணத்தைத் தொட்டுத் தொட்டு பாபக்கறை ஏறியுள்ள உன் கரங்களால், பரமனின் கோயில் படிகட்டுக்களில் ஏறி இறங்கும் இப்புனித பாதங்களைத் தொடாதே குழந்தாய்! ஆஸ்ரமத்தின் விதிகளை அறிவாயா? மூர்த்தி: அறிவிக்கப்பட்டேன் தேவா!