பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 81 ஹரி: உன் சொத்துக்கள் யாவும் ஆஸ்ரமத்துக்குச் சேரவேண்டுமென்று பத்திரத்தில் கையொப்பமிடச் சித் தமா மூர்த்தி உத்தரவை எதிர்பார்க்கின்றேன் தேவா! ஹரி: (ஆஸ்ரம ஆட்களைப் பார்த்து) அழைத்துப் போய், அனுமதிச் சடங்குகளைச் செய்யுங்கள். சுந்தரகோஷ்! இனி நாம் செல்வோமா, மந்திராலோசனை சபைக்கு? சுந்தர: உம்... காட்சி...- 42 இடம்: வேதாசல முதலியார் வீடு இருப்: பரமானந்தன், மணி, வேதாசல் முதலியார், சரசா. பர: கேட்டாயா மணி! குடியன், வெறியன், கூத்திக் கள்ளனென்று ஊரார் பேசிக்கிறதைக் கேட்டு மானம் போகு தாம் மாமாவுக்கு! மணி: நல்ல மாமனாருண்ணா கோவமில்லே வந்திருக் கணும்? வே கோவம் வராமலா இருக்கு? மணி: எங்கேய்யா வந்தது கோபம்? இல்லை. தெரி யாமத்தான் கேக்கறேன். எங்க வந்தது கோவம்? கோவம் வந்திருந்தா. அப்பவே கன்னத்திலே ரெண்டு அறை கொடுத் துக் கேட்டிருக்கமாட்டேளா? வே: இவ்வளவு பெரிய பிள்ளையை நான் அடிச்சித் திருத்தணுமா? மணி: என்னது, பரமுவையா அடிக்கச் சொன்னேன்? ஆளப்பாரு! குடியன், வெறியன் அப்படி இப்படின்னு திட் றானே, அவனையல்லவா கன்னத்திலே ஒரு அறை