பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 கொடுத்துக் கேட்டிருக்கணும்? ஏண்டாப்பா! வேலைக்காரி ஊர்லே, உலகத்திலே நடக்காதது என்னடா நடந்து போச்சுது புதுசா. குடிக்கிறான், குடிக்கிறான்னு சொல்றியே, யார் வீட்டுக் காசு? உம்...அறைஞ்சன்னா... வே: டேய்.. டேய்... யாரைடா...? மணி: ஊகூம்.. உங்களையல்ல. அந்த மாதிரி நீங்க அவன்களைக் கேட்டிருந்தீங்கன்னா...சரியான மாமனாரு தான்... பர: அப்படிக் கேள் மணி, அந்த மரமண்டையிலே ஏர்ற வரைக்கும் கேள் வே: உங்க ஞாயம் இருக்கே!... நான் ஒரு மடையன்! மணி: இப்ப சொன்னீங்களே. அது சரியான... வார்த்தை! பர: மணி! அங்கென்னப்பா பேச்சு? நான் குடிகாரன், சூதாடி, கூத்திக்கள்ளன்- இவ்வளவுதானே? இதைப் பற்றி இந்த ஆசாமி இன்னும் பேசினா...நான் கொலைகாரனாக வேண்டியதுதான்! தீர்மானமாய்ச் சொல்லிடு அதை... வே: அட பாவி! இவ்வளவு தூரத்துக்கு வந்துட்டதா? குடியைக் கெடுத்து, சொத்தைப் பாழாக்கி, என் மானத் தையும் வாங்கிட்டே? இனிமே அது ஒன்றுதானே பாக்கி? அதையும் நடத்திடு! நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தா... மணி: அது லொள் லொள்ன்னு கொலைக்கும்! வே: அப்பா, பரமு! உனக்குக் கோடி நமஸ்காரம். நீ என் வீட்டில் குடித்தனம் பண்ணது போதும். உன் பெண் டாட்டியை அழைச்சிக்கிட்டுப் போயிடப்பா, வீட்டைவிட்டு! உன் முகத்திலே விழிக்க இஷ்டமில்லை. பர: எனக்கும் அதே தீர்மானம்தான்! மணி: அப்போ... புறப்படு!