பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 பர: மணி...பைத்தியம்....கழுதையாம்! மணி: யாருயா கழுதை? வேதாசலத்தை அடிக்கிறான். வே: டேய்.. டேய் சர: அப்பா!...அப்பா...!! வேலைக்காரி பர: என்னடி வேஷம் போடறே? மானம் போகுதோ? நட்டி வெளியே... காட்சி-43 இடம்: ஹரிஹரதாஸ் ஆஸ்ரமம் இருப்: ஹரிஹரதாஸ், சுந்தரகோஷ், மூர்த்தி. ஹரி: இன்று மந்திராலோசனை சபைக்கு வர இவ்வளவு தாமதம்? ஏன் சுந்தர: உமது சீட கோடிகள் நித்ரா தேவியுடன் விளை யாட இவ்வளவு நேரமாயிற்று. இந்தத் தொல்லைக்காக வேறே எங்கேயாவது போய்விடலாமென்றால் கேட்டால் தானே... ஹரி : கரும்புத் தோட்டத்தை விட்டுக் காடுமேடு சுற்று வதா? பேதமை சுந்தரி, பேதமை! நமக்கு இங்கு என்ன குறை? பரலோக உபதேசம் செய்ய பூ; தர்ப்பணத்துக்குப் பக்தர் கள்; சிருங்கார கனிரசம் தர நீ; ஆஸ்ரமம் அமைத்துக் கொள்ளாவிட்டால் இந்த ஆனந்தம் ஏதடி, இந்த ஆனந் தம்? கிளியே! மோகனாங்கியே! துள்ளும் மதவேள் கணை யாலே, தொல்லை மிக அடைந்தேன் பகலாலே! வா, நாம் இன்ப மாளிகைக்குச் செல்வோம். [இக் காட்சியை மூர்த்தி கண்டுவிடுகிறான்.) மூர்த்தி: ஹா! கபட வேஷதாரியே! காமுகா... பக லிலே யோகியாகவும், பாதி ராத்திரியிலே போகியாகச் காட்சியளிக்கும் பேடிப் பயலே! ஆசிரமமா இது? மோட்ம்