பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 85 சாம்ராஜ்யத்திற்குப் பயிற்சி கூடமா? பரமனின் பாதார விந் தத்துக்குப் பாதை காட்டும் சன்மார்க்க ஸ்தாபனமா? அடே, ஊரை ஏய்க்கும் உன்மத்தா! உனக்கு கையிலே ஜெபமாலை; வெள்ளியிலே யோகத்தண்டு; புலித்தோல் ஆசனம்; பொற் பாதக் குறடு! நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் நயவஞ் சகப் பதரே! ஏன் நடுங்குகிறாய்? கொலைக்குத் துணித்த துஷ்டனா நீ? பஞ்சமா பாதகத்தைப் பயமின்றி செய்யத் தான் இந்தப் பண்டார வேஷமா? பாவி! பகல் வேஷக்காரா! பாமரரை ஏய்த்துப் பிழைக்கும் பரம சண்டாளா! நீ இருக் தால் என்ன; இறந்தால் என்ன?... {மூர்த்தி கிறான்.] ஹரிஹரதாசை கொலை செய்துவிடு சுந்தர: கொலை!... கொலை !!கொலை...!! (மூர்த்தி பிடிபடுகிறான்.) காட்சி--44 இடம்: பழக்கடை இருப்: டிரைவர், அமிர்தம், பழக் கடைக் காரர். (எரியும் வீட்டிலிருந்து தப்பி வந்த அமிர்தம். ஒரு லாரியில் யாருக்கும் தெரியாமல் ஏறிக் கொண்டு வரும்போது லாரி டிரைவர் பார்த்து விடுகிறான. டிரை: ஏய், யாரடி? திருட்டுக் கழுதை! இறங்கடி கழுதை... அமிர்: ஐயா! நான் ஒரு அனாதை' எங்க வீடு எரிஞ்சி, என் தாய் - தகப்பனார் அதிலே எரிஞ்சி போயிட்டாங்க... பழக்க: ஐயோ, பாவம்!ஏம்மா, எங்க கடைப் பழங் களை எடுத்துக்கிட்டுப் போய் தெருவிலே வித்துகிட்டு வர் றியா? ஏதாவது சம்பளம் போட்டுத் தர்றேன்.. அமிர்: ஆகட்டும் ஐயா.