பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 வேலைக்காரி காட்சி-45. இடம்: குடிசை இருப்: சரசா, பரமானந்தன், மணி. [பரமானந்தனும் சரசாவும் சைக்குச் செல்கின்றனர்.) மணியும் ஒரு குடி பர்: சரசா ! இனிமே இதுதான் நம்ப வீடு. பங்களா இல்லை; மாடி இல்லை; வராண்டா இல்லை; தோட்ட மில்லை. மணி: அட, தோட்டமிருக்குப்பா! அதிலே புஷ்பச்செடி கள் கிடையாது; பாம்புப் புற்று இருக்கும்... பர : சரசா ! இந்தத் தோண்டியில் ஒண்ணு எடுத்துக்க.. ஹூம்... இந்தக் கிணத்திலிருந்து மடமடவென்று தண்ணீர் இறைச்சி கொட்டு. மணி: பரமானந்தா.. ஹும்... பர: இந்த பூட்சை கண்ணாடிபோல பாலீஷ் பண்ணு. வேலை எல்லாம் முடிந்த பிறகு இதைச் சாப்பிடு. நடக்கட் டும், நான் சொன்ன வேலைகள்! [சரசா போகிறாள்] பர: மணி! தகப்பன் செய்த குற்றத்திற்கு இவள்... மணி: தந்தை செய்த தவறுக்காக இவளை ஏன் வதைக்கவேண்டும் என்கிறாய். ஆனந்தார் நமது திட்டத்தை மறந்து விட்டாயா? தடுமாற்றம் ஏற்பட்டால் கிளையில் தொங்கிய உன் தந்தையை நினை! மரக் {சரசா மண் பானையைத் தவறிக் கீழே போட்டு விடுகிறாள்.] பர: இதே குற்றத்தை அமிர்தம் செய்திருந்தால்...