பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 87 மணி: சாக்ஷரத் பத்ரகாளியாகிவிடுவாள் தர்மபத்தினி சரசாதேவி.. பர: சரசா ! இந்தா... மார்க்கட்டுக்குப்போய், சமைய லுக்கு வேண்டிய காய் கறிகளை வாங்கி வா. சர: நானா? பர: ஏன், உன் தாதியை அனுப்புகிறாயா? நீ அன் னக்காவடி ஆனந்தனின் மனைவி; அல்லி ராணியல்ல... மணி: உனக்கு வேலை கிடைக்கும்வரை உன் மனைவி பக்கத்து மார்க்கட்டில் காய்-கறிகள் விற்றுவர வேண்டும். சர: என்னை ஏன் இவ்விதம் சித்ரவதை செய்கிறீர் கள்? என்னை இக்கிணற்றிலே பிடித்துத் தள்ளிவிடுங்களேன். மணி: ஆனந்தா ! இந்தா.... பர: என்ன அது? மணி: காய்கறி பர: (சரசாவை நோக்கி) இந்தா தூக்கு கூடையை! ஊம் . நட. (சரசா காய்கறிக் கூடையைத் தூக்கிக் கொண்டு செல்கிறாள்.] காட்சி- 46. இடம்: வீதி இருப்: அமிர்தம், தண்டபாணி பாலு முதலியார், ஒரு [அமிர்தம் பழக் கடையிலிருந்து கூடையில் பழம் எடுத்துக்கொண்டு வீதி வழியே வருகிறாள்.] அமிர்: பழம்.. மாம்பழம். மாம்பழம்!