பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 89 பாலு: டாக்டர்! நான் இந்த ஊருக்குப் புதுசு. என்னை பர்மா பாலு முதலி என்று சொல்வார்கள். பர்மாவிலிருந்து கஷ்டப்பட்டு மணிப்பூர் வழியாக இங்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியிலே என் மகள் சுகிர்தம் காணாமல் போயிட்டா டாக்டர்! திடீர்னு அகப்பட்டுட்டா டாக்டர். அவள் இருக் கிற கோலத்தைப் பாருங்கள் டாக்டர்! நல்லா பாருங்கள், டாக்டர்... (டாக்டர் கையைப் பிடித்துப் பார்க்கிறார்.) பாலு: என்னையா கையைப் பிடிச்சு பார்க்கிறே? ஓய்! என் மகள் சுகிர்தம் கொஞ்ச நாளா என்னைப் பார்க் காததினாலே புத்தி கொஞ்சம் மாறிப் போச்சு. அவ்வளவு தான்! அமிர்: டாக்டர்! எனக்குப் புத்தியும் மாறல்ல; மறதியு மல்ல. தெரு வழியா... போய்க்கிட்டு இருந்தேன்...என் னைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து தன் மகளென்று சொல்றாரு.. பாலு: பின்னே... என்னவாம்ன்னே? அமிர்: டாக்டர்! அவருக்குத்தான் ஏதாவது பைத்தி யமா இருக்கும். பாலு: உம்...கிடையாது. அமிர்: ஐயா! என்னை தயவுசெய்து வெளியே அனுப்பி விட்டால் போதும். பாலு: பார்த்தீங்களா! 'வெளியே போகணும். வெளியேபோகணும்'-சதா இதே பொலம்பல்தான் டாக்டர்! இதனால் ஆயிரம் வந்தாலும் சரி, போனாலும் சரி, என் மகள் பைத்தியத்தை... டாக்: தீர்த்துடுறேன்... பாலு: தீத்துடுங்கோ...