பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம். வேதாசல முதலியார் வீடு

இருப்போர்: வேதாசல முதலியார், சொக்கன்.

வே: காளி, மகமாயி, லோகமாதா...டேய், சொக்கா! கொண்டு வாடா தாயுமானவரை. இது என்னடா பார்சல்?

சொ: இதுங்களா ... நம்ம சரசம்மா மாதர் சங்கத்திலே டான்ஸ் ஆடப்போறாங்களில்ல...

வே: கதையை வளர்க்காதேடா...விஷயத்தைச் சொல்லூ.

சொ: அதுதானுங்க...அந்த டான்ஸுக்கு உடைகள் எல்லாம் தச்சு வந்திருக்குதுங்க....

வே: இவ்வளவுமா?

சொ: இன்னமும் ஒரு பார்சல் வரவேண்டியதிருக்குங்க...

வே: இவ்வளவுக்கும் பணம்?

சொ: அதெல்லாம் நேத்திக்கே கொடுத்தாச்சுங்க.

வே: அட பாவி!... அமிர்தம்,சரசா இருக்கிறாளா? அவளைக் கூப்பிடு! காபி சாப்பிட்டாச்சுதா அவன்?

அமி; அவரையும் கூப்பிடட்டுங்களா?

வே: சீ! அதிகப் பிரசங்கி. ஒன்று சொன்னா ஒன்பது கேள்வியா? போ! போயி... சரசாவைக் கூப்பிட்டு வா.

காட்சி-2. இடம்: வேதாசல முதலியார் வீடு.

இருப்: சரசா, அமிர்தம், மூர்த்தி. [அமிர்தம் போகிறபோது, சரசா எதிரே வருகிறாள்.]