பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 91 டாக்: அம்மா! நீ ஒரு உத்தமமான பெண். உன்மத்தம் பிடித்த அவர் கண்ணுக்கு அவர் மகள்போல் தோன்று றாய் நீ. அமிர்: எனக்கிருந்த பயம் தீர்ந்து போச்சு! எங்கே, நீங்களும் என்னைப் பைத்தியம் என்று நினைச்சிக்கிடுவீங் களோ என்று பயந்தேன். டாக் : இல்லை. பாலு முதலியாருக்குத்தான் பைத்தி யம். உன்னாலே அந்தப் பைத்தியத்தைத் தெளிய வைக்க லாம். அமிர்: அவர் பைத்தியத்தை நான் தெளியவைக்க முடியுமா? டாக்: முடியும். அதிலே ஒரு ஆபத்தும் இருக்கு. அமிர்: அவர் பைத்தியத்தைத்தெளிய வைக்க எனக்கும் ஆசைதான். ஆனா ..ஆபத்து என்று என்னென்னமோ சொல்றீங்களே? டாக்: உன்னாலே அவர் பைத்தியம் நீங்கும். நீங்கின உடனே, நீ அவர் மகளல்ல என்பதை அறிஞ்சிக்கிடுவார். மறுபடியும் நீ ஏழையாக வேண்டும். என்ன சொல்றே? அமிர்: சொல்றது என்ன! அவரைப் பார்த்தாலே பரி தாபமாக இருக்கிறது. அவர் பைத்தியத்தைத் தெளிய வைக்க முயற்சி செய்கிறேன் Lாக்டர்! டாக்: அம்மா! நான் நினைத்த மாதிரி, நீ உண்மையில் ஒரு உத்தமி. கவனி .. நீ அவர் மகள். பைத்தியம்போல் நடிக் கணும். நான் உனக்குக் கொடுக்கிற மருந்தெல்லாம் அவர் சாப்பிட்டாத்தான் நான் சாப்பிடுவேன் என்று அவரையும் சாப்பிடச் செய்ய வேண்டும். என்ன சொல்கிறாய்? அமிர்: ஆகட்டும் டாக்டர்! டாக்: மிஸ்டர் முதலியார்வாள்...