பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 வேலைக்காரி பாலு: என்னங்க டாக்டர்!...அட.. என்னய்யா கூப் பிட்டுவிட்டுப் பேசாம இருக்கிறீங்களே. டாக்: முதலியார்வாள்! உங்க மகள் பைத்தியத்தை நான் தீர்த்துவிடுகிறேன. பாலு: ஆமா... தீர்த்துப்பிடுங்க. டாக் : ஆனால் ஒன்று. உங்க மக மனசிலே கவலையோ, வருத்தமோ ஏற்படக்கூடாது. பாலு: ஏற்படாது. டாக்: அப்படி ஏதாவது ஏற்பட்டதோ, அப்புறம் பைத்தியம் முத்திடும். பாலு: டாக்டர்! பைத்தியம் முத்த வேண்டாம். டாக்: அப்போ...உங்க மகள் சொல்கிறட்டி நீங்க நடக்க வேண்டும். பாலு: என்னங்க டாக்டர்! குழந்தை ஆடச் சொன்னா ஆடுறேன்; பாடச் சொன்னா பாடியே தீர்த்துவிடுகிறேன். (பாலு முதலியார் பைத்தியம் தெளிகிறது.] பாலு: டேய், இங்கே வாடா! எல்லாம் தெளிஞ்சு போச்சுடா! எங்கேடா என் மகள் சுகிர்தம்? அமீர்: இங்கேதான் இருக்கேனப்பா! பாலு: அட, விளையாட்டு இருக்கட்டும் அம்மா.. என் மகள் சுகிர்தம் எங்கே என்று கேட்கிறேன். அமிர்: ஐயா! விபரமாகச் சொல்கிறேன் கேளுங்க... நீங்க ஒருநாள் சிங்கப்பூர் வழியாக வரும்போது உங்கள் மகள் சுகிர்தம் வழியிலே செத்துப் போச்சுதுங்களே! பாலு: ஆமா...ஞாபகம் இருக்கிறது. அமிர்: அதிலிருந்து நீங்க கொஞ்சம் பைத்தியமாய் இருந்தீங்க. பாலு: அதுவும் ஞாபகமிருக்கிறது... உட்காரம்மா!