பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 வேலைக்காரி பர: மணி! நானும் சும்மா இருக்கவில்லை... மணி: என்ன செய்தே? பர: மெட்ராசுக்குப் போயிருந்தேன். அங்கே நம்ம வேலைக்காரி அமிர்தம் இல்லே.. மணி: இல்லையா? இருக்கா ... பர: அங்கே அவள் பணக்காரியா... இருக்கா. மணி: எப்படி ? பர: பர்மா பாலு முதலியார் என்று ஒரு பைத்தியம், வீதியிலே போய்க் கொண்டிருந்தவளைப் பிடித்துக் கொண்டு நீ என் மகளென்று வைத்துக் கொண்டிருக்கிறார். மணி: பாரு அதிர்ஷ்டத்தை! (இச்சமயம் பத்திரிகை விற்கும் பையன்) பே.வி: பேப்பே, பேப்பர்! ஹரிஹரதாஸ் கொலை வழக்கு...பேப்பர்... மணி: டேய், பேப்பே! இங்கே வாடா! ஏண்டா எழுத் தைப் போட்டுக் கொலை பண்றே? பேப்பர் என்று சொல். (மணி பத்திரிகைச் செய்தி படிக்கிறான்) ஹரிஹரதாஸ் கொலை! மூர்த்தி கைது. ஆனந்தா! பழி வாங்கும் படலத் துக்கு பஸ்ட் கிளாஸ் சான்ஸ்! பார், நம்முடைய வேலையை! காட்சி-- 49. இடம்: வேதாசலம் வீடு இருப்: வேதாசலம் முதலியார், மணி. {LD Goof?, வேதாசலத்தின் வீட்டிற்கு வருகிறான்.) மணி: என்னங்க, முதலியார்வாள்! நடந்ததை நினைத்து என்னங்க பிரயோஜனம்? இனி நடக்க வேண்டி யதைப் பாருங்க...