பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 95 வே: செக்ரட்டரி சார்! இன்னும் என்ன நடக்கணும்? ஒரே மருமகன். குடிகாரன் என்று ஊரெல்லாம் ஏசுகிறார் கள்; ஒரே மகள் கண்ணைப் போல் வளர்த்தேன்! ஆனால் இன்று கண் கலங்கி நிற்கிறாள். ஒரே மகன்; வீடு வேண்டாம் வாசல் வேண்டாம் என்று வெளியே போய்விட்டான். இன்று அவன்மேல் கொலைக் குற்றம் மணி: என்னங்க, போங்க! நீங்க இவ்வளவு சீக்கிரமா.. மனசை விடப்படாது. இன்னும் ஆக வேண்டியதிருக்கிறது, உங்களாலே எவ்வளவோ காரியம்! நீங்க நான் சொன்ன வக் கீலையே ஏற்பாடு செய்யுங்கள்: அப்புறம் பாருங்கள். வே: என்னமோ... செக்ரட்டரி சார்! உங்களைத்தான் மலைபோல நம்பிக்கிட்டு இருக்கேன். வாள்! மணி: நம்புங்கள்... தாராளமாக நம்புங்க முதலியார் காட்சி-50 இடம்: நீதிமன்றம் இருப்: பப்ளிக் பிராஸிகியூட்டர், சேவகன், சுந்தரகோஷ், வடநாட்டு வக்கீல், ஜட்ஜ். (பழைய ஆனந்தனாகிய பரமானந் தன் வடநாட்டு வக்கீலாகவும். மணி, அவன் வேலைக்காரனாக வும் மாறுகிறார்கள்.] மணி: ஆனந்தா! நான் சொன்னதையெல்லாம் உண் மையிலேயே நம்பிவிட்டார் வேதாசல முதலியார். ஆனால் அவருடைய பரம விரோதியே வடநாட்டு வக்கீலாக வருவது அவருக்குத் தெரியாது.பாவம்! பழி வாங்கும் டடலத்தின் கடைசிக் கட்டம். பஸ்ட் கிளாஸ் சான்ஸ்! விளம்பரப்படுத்தி ழி வாங்குவதற்கு அருமையான சந்தர்ப்பம்! ஆனந்தா!