பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 வேலைக்காரி நினைவிருக்கட்டும்! மூர்த்தியினமேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் கொலை! (நீதிமன்ற விசாரணை] பப்ளிக் பிரா : கொலை! பகிரங்கமாகச் செய்யப்பட்ட கொலை! துணிவோடு, சட்டத்தைத் துச்சமாக மதித்துச் செய்யப்பட்ட படுகொலை! பக்திமான் வேடம் பூண்டு பாதகச் செயல் புரிந்தவன், இதோ, இந்த மூர்த்தி. மூர்த்தி தான் கொலை செய்தான் என்பதற்கு ருஜு சாக்ஷி இருக் கிறது. கொலை செய்ததை அவனே ஒப்புக் கொண்டிருக் கிறான். அதற்கும் சாக்ஷி இருக்கிறது. கொலை செய்த இடத்திலேயே மூர்த்தியைப் பிடித்துக் கொண்டார்கள். சாக்ஷி உண்டு இதற்கும். சேவ: சுந்தரகோஷ். சுந்தரகோஷ்...சுந்தரகோஷ்! பப்ளி பிரா: தோட்டத்துப் பக்கம் இருந்து நீர் பயப் படும் படியாக சப்தம் கேட்டது. யாரோ-யாரையோ மிரட்டுவதுபோல! சுந்தர: ஆம்! அய்யோ! ஏனடா இந்த அக்கிரமம்? பாவி என்று குருதேவர் கூறினார். பப்ளி பிரா: உடனே தோட்டத்துப் பக்கம் ஓடினீர்... சுந்தர: ஆம்; அப்போது மூர்த்தி, குருதேவரின் கழுத் தைப் பிடித்து நெரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்; 'கொலை, கொலை' என்று கூவினேன். ஆஸ்ரமவாசிகள் ஓடிவந்து பிடித்துக் கொண்டார்கள். பப்ளி . பி: யாரை? சுந்த: மூர்த்தியை. பப்ளி.பி: அப்போது குரு மாண்டுபோய் விட்டார்? சுந்த: ஆம்; மூர்த்தி அப்போது பக்கத்திலேயே இருந் தான்.