பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 97 பப்ளி பி: குருவின் கழுத்தை மூர்த்தி நெரித்ததை நீர் பார்த்தீர்? சுந்த: ஆம்; பார்த்தேன்... பப்ளி பி: தெட்சால் மி லார்டு வடநாட்டு வக்கீல்: உமது பெயர்? சுந்த: சுந்தரகோஷ்! வட . வ: ஆஸ்ரமத்தின், பூர்வாசிரமப் பெயர்? சுந்த: சுந்தர்..சுந்தரம். வட வ: சரி, சுந்தரகோஷ்! குருதேவர் கொலை செய் யப்படுவதை நீர் பார்த்தீர்? சுந்த ஆம்! வட.. வ: கொலை செய்து கொண்டிருக்கும்போதே பார்த்தீர்? சுந்த: ஆம்; பார்த்தேன். வடவ: ஆனால் அதைத் தடுக்க எந்தவித முயற்சியும் செய்யவில்லை. ஏன்? மூர்த்தி குருதேவரைத் தாக்குகிறான்; அதை நீர் பார்க்கிறீர்; அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி குருதேவரைக் காப்பாற்ற வேண்டுமென்று உமக்குத் தோன்றவில்லை. ஏன்? குருதேவர் கொலை செய்யப்படும் போது பிரதம சீடர் ஏன் பெண்போல் பதுங்கிக் கொள்ள வேண்டும்? சுந்தரகோஷ் குருவைக் காப்பாற்ற முயற்சிக்கா மல் ஏன அங்கிருந்து ஓடவேண்டும்? பிரதம சீடரே! மீண் டும் கேட்கிறேன்... கொலையைக் கண்டு பயந்தீரா? அப் போது நீர் இருந்த நிலையைக் கண்டு பயந்தீரா? (மெம்பர்ஸ் ஆப் தி ஜூரி) பிரதம சீடர் பதில் கூற மறுக்கிறார். பரிதாப மாக இருக்கிறது, அவர் நிலையைப் பார்க்க! அந்த நள்ளிர விலேகூட அவர் நிலை பரிதாபகரமாய்த்தான் இருந்திருக்க பூ-154-வே-4