பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 வேலைக்காரி வேண்டும். பாதி ராத்திரி வேளையிலே சத்தியத்தின் ஜுவாலை வீசுவதைக் கண்டு பதைபதைத்துத்தான் போயி ருப்பார். சுந்தரகோஷ்! ஆஸ்ரமத்து ஆட்களை அழைத்து வரத்தானே அலறிக்கொண்டு அவசரமாக உள்ளே ஓடினீர்? சுந்த: ஆம். வட .வ: ஆட்கள் ஓடிவந்தார்களா? சுந்த: ஆம். வட .வ: நீரும் அவர்களோடு ஓடி வந்தீரா? சுந்த: இல்லை...சற்றுப் பொறுத்து வந்தேன்... வட.வ: ஆட்களை அழைத்துவரச் சென்ற நீர், ஏன் அவர்களுடன் திரும்பி வரவில்லை? சுந்தரகோஷ்! என்கேள்வி களை நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆட்களைக் கூவி அழைத்துவிட்டு, அவர்கள் வரும்போது நீர் அங்கில்லை. கொஞ்ச நேரம் கழித்து வந்தீர். இதுதானே உண்மை? சுந்த: ஆம்! வட.வ: அந்தக் கொஞ்ச நேரம் எங்கே போயிருந்தீர்? என்ன செய்து கொண்டிருந்தீர் சொல்லும்! நேரடியான கேள்வி . பிரதம சீடரே! ஏன் நெற்றியைச் சுளிக்கிறீர்? சொல் லும் பதில்? அந்தக் கொஞ்ச நேரம் எங்கே போயிருந்தீர்? என்ன அவ்வளவு அவசரமான வேலை? கொலை செய்யப் உட்டு கிடக்கிறார் குருதேவர். கொலை செய்தவன் பிடிபட் டான்; ஆட்கள் அவனைச் சூழ்ந்து நிற்கிறார்கள். நீர் மட் டும் இல்லை. நீர் பிரதம சீடர்! அந்தக் கொஞ்ச நேரம் எங்கே சென்றிருந்தீர்? சொல்லும் சுந்தரகோஷ், எங்கே சென்றிருந் தீர் அந்தச் சமயம்? சொல்லும் பதில்? சொல்ல மாட்டீர்? சொல்ல முடியாது. சுந்தரகோஷ்! உன் சூது கோர்ட்டாருக் குத் தெரியாது; உன் கள்ளக்காதல் கோர்ட்டாருக்குத் தெரி யாது; உன் ஏமாற்று வித்தைகள் கோர்ட்டாருக்குத் தெரி யாது. நீ நடித்த நாடகம் கோர்ட்டாருக்குத் தெரியாது; இவர்கள் காணட்டும், குருவுடன் நீ இருக்கும்போது மூர்த்தி