பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 703 'வேண்டாம் லீலா, இனி என்னால் தாங்க முடியாது" "எதை?” "போ லீலா, அதை சொல்ல எனக்கு ரொம்ப வெட்கமாயிருக்கிறது!" "ஈஸ் இட்? - அது கூட உண்டா என்ன, உங்களுக்கு?" "மானத்தை வாங்காதே, இன்றிரவு ." "சரி, தொலையட்டும் - பத்து மணிக்கு மேல் அவரை நேரே ட்ரீம் லேண்ட் ஹோட்டலுக்கு வந்துவிடச் சொல்லுங்கள்." "அடி சக்கை, இப்போதுதான் எனக்கு உயிர் வந்தது - நம்பர்?" “33!” "ரைட்டோ - அவனைப் பற்றி நீ ஒன்றும் வொளி பண்ணிக்காதே - வயது அறுபதுக்கு மேலிருக்கும் டிஷ்யூ ஸாரியைக் கட்டிக்கொண்டு ரீடா ஹேவெர்த் "ஸ்டைலிலே ஒரு போஸ் கொடுத்தால் போதும், பய அப்படியே சொக்கி, மங்க்கி கிலாண்ட் இன்ஜக்ஷன்