பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 எத்தனை வகை மாற்றங்கள்! இயற்கையின் இயல்பை எழுத்தில் வடித்துக் காட்ட முடியுமா? மனித மனமும் மனித ஆற்றலும், பேராற்றல் மிக்க இயற்கையைப் போன்றதே எனலாம். எது எப்பொழுது எப்படி கிகழும் என்பதை வரையறுத்துக் கூற வல்லார் யார்? வகை யாது? விடை காண முடியாத வினாக்களே மிகுதி! இதுவே வாழ்வு! இதுவே உலகம்! இத்தகைய உணர்வுகளோடு வாழ்வையும் சமுதாயத்தையும் நோக்கினால், சம நிலை தோன்றும்! சண்டை சச்சரவு எனும் சங்கடங்கள் வாரா. வந்தாலும் விலகும். நாம் நமக்காக அமைத்துக் கொண்ட சமுதாயக் கட்டுப்பாடுகளை, வரம்புகளை அறிவார்ந்த தெளிவுடன் கண்டறிதலே முதற்கடமை. யாரும் யாருக்கும் அடிமையில்லை; எவரும் எதற்கும் தடையாய் இருக்கக் கூடாது. எதுவும் தடைப்படுத்தக் கூடாது. மனித உடலுறுப்புகள் இயங்கும் பாங்கினைப் பார்ப்போம். எது உயர்ந்தது? எது சிறந்தது? எவ்வுறுப்பு தாழ்ந்தது? எதன் பணி குறைவானது? உடல் உறுப்புகளில் ஒன்று குறைவு பட்டாலும் துன்பம்தானே? நாம் உருவாக்கிய மணிப்பொறியில் ஒரு சிறு கருவி பழுதுபட்டாலும் மணிகாட்டும் பணி தடைப்படும் அல்லவா?