பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 727 "பாத பூஜை' படாதிபதி பத்மநாபனைக் கண்டதும் குஞ்சமாளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை - அத்தனை படாதிபதிகளையும் வெளியே நிற்க வைத்து விட்டு, அவரை மட்டும் எப்படி மேலே அனுப்புவது என்ற குழப்பந்தான் அதற்குக் காரணம் எனவே, "வாருங்கள், வாருங்கள்' என்றாள் ஒரு தரம், 'நில்லுங்கள், நில்லுங்கள்' என்றாள் இன்னொரு தரம். 'இதோ வந்து விட்டேன்!' என்றாள் ஒருதரம்; இல்லை, வரவில்லை' என்றாள் இன்னொரு தரம். 'உட்காருங்கள்!' என்றாள் ஒரு தரம்; "நிற்கிறீர்களே' என்றாள் இன்னொருதரம். அதற்குள் சேலை கட்டவிழ்ந்து விடவே, அவள் அதை அவசரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அள்ளிச் செருகத் தன் அறையை நோக்கி ஓடினாள். அதுதான் சமயமென்று மற்றவர்களை யெல்லாம் எரித்து விடுபவர்போல் பார்த்த வண்ணம் படாதிபதி பத்மநாபன் மாடிப் படிகளை நோக்கி விரைந்தார். "மறந்து விட்டீர்களே' என்றான் ஓ.கே.