பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 747 'இருவரும் ஏககாலத்தில் திரும்பிப் பார்த்தனர். "ஒ, கதாசிரியர் கந்தசாமியா' என்றான் பீதாம்பரம் எசுத்தாளமாக, "ஆமாம், பயங்கர மிருகங்கள் பல வாழும் பணக் காட்டில் பசிக்காக ஒரு பிடி உணவு தேடிப் பிரயாணம் செய்யும் ஒரே பாதசாரி நான் ஒரே மனிதன் நான்!” என்று அவன் சொன்னதற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான், வயிற்றில் ஈரம் இல்லா விட்டாலும் நெஞ்சில் ஈரம் இருந்த அந்த எழுத்தாளன்! வழக்கம் போல் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், "கார் அனுப்புவதற்குள் வந்து விட்டீர்களே!' என்றான் வஞ்சக நெஞ்சனான பீதாம்பரம். "இனி நீங்கள் கார் அனுப்ப மாட்டீர்கள் என்று தெரியும்; அதனால்தான் என் கால்களைக் கொண்டே வந்துவிட்டேன்." "ஏனாம்?” "கதையோ முடிந்து விட்டது; இனி காசு வாங்க வேண்டியதுதானே பாக்கி"