பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 நம் சொந்த உடலுறுப்பில் சிறு நோய் கண்டால் எவ்வாறு தாமதமின்றி, தக்கவாறு கவனிப்போமோ அவ்விதமே ஒவ்வொரு கட்டத்திலும் நாம் ஒவ்வொரு துறையிலும் செயல்பட வேண்டும். நாம் ஒருகூட்டுப் பறவைகள் என்னும் பாச உணர்வோடு பொதுக் காரியங்க ளில், கட்புறவுடன் கிலைமைகளை அணுகவேண்டும்; ஆராய வேண்டும். அறிவும் ஆற்றலும் அன்புறவோடு ஆக்கம் புரிய வேண்டும். இதுவே அறிவறிந்த, பண்பாடு மிக்க மனிதத் தன்மையாகும். மனித வாழ்க்கை நெறியாகும். இத்தகைய ஒத்த உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றி உறவாடிச் செயல்பட்டு ஒருமித்த சமுதாயமாக வாழ முற்பட வேண்டும். அதற்குரிய சிந்தனையை எழுத்தாளர், சிந்தனையாளர் விந்தன் அவர்கள் குறித்துக் காட்டியுள்ளார். தெருவிளக்கு' எனும் முற்றுப் பெறாத கதையும் இணைந்துள்ளது. எனினும் முழுக் கதையாய்த் தெரிகிறது. படித்துச் சுவையுங்கள். அறுபதாண்டுகட்கு முன்னர் அவர் தந்துள்ள கருத்துகள் இன்னும் பயன் தரத் தக்கவையாய் உள்ளன. அவர்தம் பொது நோக்கை நாம் பொறுப்போடு புரிந்து, நாம் ஏற்றத் தாழ்வு அகற்றி, எல்லோரும் ஒரு குடும்பம் என்று எண்ணி, இணைந்து வாழ முற்படுவோம். அன்புடன் கோ. ஜனார்த்தனன் விந்தன் அறக்கட்டளை