பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வேலை நிறுத்தம் ஏன்? இதன் பயனாக, இந்தியத் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்தது. ஆனால், அதன் மூலம் இந்தியாவின் தொழில் அபிவிருத்தி அடைந்ததா என்றால், அதுதான் இல்லை! ஆகாய விமானங்கள், கப்பல்கள், மோட்டார் லாரிகள் முதலியவற்றைச் செய்யும் பயிற்சி இந்தியத் தொழிலாளிகளுக்கு அளிக்கப்படவில்லை; இங்கிலாந்தில் இருந்தும், அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும் வரும் மேற்கூறியவற்றின் தனித் தனிப் பாகங்களை ஒன்று சேர்க்கும் பயிற்சிதான் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. "இந்த யுத்த காலத்தில் இந்தியா தனக்கு வேண்டிய வற்றில் பெரும் பாகத்தைத் தானே உற்பத்தி செய்து கொள்ளப் போகிறது" என்று அப்போது இந்தியா மந்திரியா யிருந்த கர்னல் அமெரி, பார்லிமெண்ட் சபையில் பெருமையுடன் கூறிக்கொண்டார். அந்தப் பெரும்பாலானவை என்னென்ன தெரியுமா?