பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வேலை நிறுத்தம் ஏன்? 5上リ வரவுக்கேற்ற செலவு ! வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கைச் செலவு களைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்" என்று இன்று, இடைக்கால தேசீய சர்க்காரில் பிரதம மந்திரி பதவி வகிக்கும் பண்டித ஜவஹர்லால் நேரு சமீபத்தில் கூறினார் இந்த உபதேசம் இந்தியர்களுக்குப் புதியதல்ல பாரத நாட்டுப் பழமொழிகள், பழங்கதைகள் ஆகியவைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மேற்கூறிய உபதேசத்தை இந்நாட்டு மக்களுக்குச் செய்து வருகின்றன இன்று எல்லா வகையிலும் இந்நாடு பிற்போக்கு அடைந்திருப்பதற்கு மேற்கூறிய உபதேசமும் ஒரு விதத்தில் காரணமாகும்