பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வேலை நிறுத்தம் ஏன்? அவைகளெல்லாம் பிறர் எழுதிய வற்றைப் படித்து அறிந்தவை , பிறர் சொல்லு பவற்றைக் கேட்டு அறிந்தவை , இதயத்தோடு இதயம் ஒன்றிப் பழகி அறிந்தவையல்ல ! அப்படியானால், அந்தத் தலைவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணம், இந்த நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழங்கிவரும் "வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும்' என்பதைப் பற்றிய கட்டுக் கதைகள்தான் ! சுயநல வாதிகளின் மேற் கூறிய உபதேசத்துக்குச் செவி சாய்த்ததன் பயனாக இந்நாட்டு மக்கள் தங்கள் ஆசையைக் கட்டுப் படுத்தினார்கள்; அத்துடன் தங்கள் அறிவையும் கட்டுப்படுத்திக் கொண்டார்கள் நாளடைவில் பகுத்தறிவையே இழந்து படுகுழியில் தள்ளப்பட்டார்கள் ! யாராயிருக்கட்டுமே, அவர் பொதுஜன சேவை என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்து விட்டால் போதும் - அவர் சொன்னதை நம்பினார்கள் செய்வதைப் போற்றினார்கள்! உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் சிந்தனை செய்வதைத் தவிர, இந்நாட்டு மக்கள் வேறு எதற்குமே சிந்தனை செய்வதில்லை