பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வேலை நிறுத்தம் ஏன்? "வரவுக் கேற்ற செலவு செய்ய வேண்டும்" என்ற நிலை மாறி, "செலவுக் கேற்ற வருவாய்க்கு வழி செய்து கொள்ள வேண்டும்” என்ற நிலை வராததால், தன் குழந்தைக்குப் போதுமான கல்வி யறிவு புகட்ட fr}} * $n வேண்டும்; வாழ்க்கையில் தான் முன்னுக்கு வராவிட்டாலும் தன் குழந்தையாவது முன்னுக்கு வரவேண்டும் - என்பதைத் தொழிலாளி அடியோடு மறந்துவிடுகிறான்! அன்னிய ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்கும் இந்த நாட்டில், தொழிலாளிகளின் குழந்தைகள் சர்க்கார் செலவில் போதுமான கல்வி கற்பதற்கும் வசதியில்லை. இந்த நிலையில் வாழ்ந்துவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், எப்படி உண்மை யான ஜனநாயக வாதிகளாய் இருக்கமுடியும்? இன்றைய ஆங்கில மோகக் கல்வி புதிய விளைவு.