பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 53 ஒரேயடியாய்ச் செத்துப் போவதே மேல் என்று துணியும்போதுதான், அவர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கிறார்களே தவிர, அதை ஒர் அற்ப விளையாட்டுக் கருவியாக எண்ணி எப்பொழுதுமே உபயோகிப்பதில்லை. இத்தனைக் கஷ்டங்களுடன், தாங்களும் மனிதர்கள் என்பதை அறவே மறந்து விட்டிருக்கும் போலீஸாரின் கொடுமைகளுக்கும் தொழிலாளிகள் ஆளாக வேண்டுமா? அமைதியைப் பாதுகாப்பதற்குப் போலீஸாரின் உதவியை நாடுவதைத் தவிர, ராமராஜ்ய ஸ்தாபகர் களுக்கு வேறு வழி ஒன்றுமே யில்லையா ? உதாரணமாகச் சமீபத்தில் நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தைப் பார்ப்போம். சென்ற ஜூன் மாதம் 27.உ நாடெங்குமுள்ள ரயில்வே தொழிலாளிகள், தங்களுக்குக் குறைந்த பட்சம் முப்பத்தைந்து ரூபாயாவது மாதச் சம்பளம் வேண்டு மென்று கோரி, வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். ஒரு பிரயாணி உட்காரக் கூடிய இடத்தில் நாலு பிரயாணிகள் நின்று பிரயாணம் செய்ததன் பயனாகத் தொண்ணுறு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருந்த ரயில்வே போர்டார்,