பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வேலை நிறுத்தம் ஏன்? நல்ல வேளையாக அவர்களுடைய கோரிக்கை களை ஓரளவாவது நிறை வேற்றி வைப்பதாகக் கூறி வேலை நிறுத்தத்தைக் கைவிடும்படிச் செய்தார்கள். இந்தச் சமயத்தில் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் எரிகிற தீயில் எண்ணெய் விடுவது போன்ற காரியங்களைச் செய்தார்கள். அதாவது, கொந்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களிடையே குழப்பம் உண்டாக்கும் படியாக அங்கே நாலு பேரை ஸ்ஸ்பெண்ட் செய்வது, இங்கே இரண்டு பேரை டிஸ்மிஸ் செய்வது - இவ்வாறு ஏதாவது பண்ணி வைத்தார்கள்! சகோதரத் தொழிலாளிகளும், தொழிலாளர் தலைவர்களும் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அவர்கள் இந்தத் தகராறைத் தீர்த்துவைக்க முதலாளிகளுடன் சமரசம் பேச முயன்றனர். ஆனால் அவர்களுடைய முயற்சி முதலாளிகளால் முறியடிக்கப் பட்டு விட்டது. ஆகவே, வேறு வழியின்றித் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் மத்திய நிர்வாகக் கமிட்டி ஜூலை மாதம் 31உ கூடி, ஆகஸ்ட் 24உ வேலை நிறுத்தம் செய்வதென்று தீர்மானித்தது.