பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வேலை நிறுத்தம் ஏன்? ஒன்றிரண்டு பேர் அல்ல, பதினாலாயிரம் பேர் வேலை நிறுத்தம் செய்த விஷயம் இது இந்தத் துணிப்பஞ்ச காலத்தில் தினசரி இரண்டரை லட்சம் கெஜம் துணி உற்பத்தியை நஷ்டமாக்கிய விஷயம் இது ! இந்த விஷயத்தை "அற்ப விஷயம்' என்று சொல்லிவிட்டு, முதலாளிகளுக்குத் துணையாகப் போலீஸாரை அனுப்பிவிட்டு, பதினெட்டு நாட்கள் சும்மாயிருந்தார்கள், காங்கிரஸ் மந்திரிமார்கள் ! வேண்டுமானால், வேலை நிறுத்தம் ஆரம்பித்த மறுநாளே மந்திரிமார்கள் ஆலை முதலாளியைக் கூப்பிட்டு மேற்கூறிய அற்பக் காரணத்தை நிவர்த்தி செய்து, பதினாலாயிரம் தொழிலாளிகளைத் திருப்தியுடன் வேலைக்குத் திரும்பச் செய்திருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. "பதினெட்டு நாட்கள் தலையிட மாட்டோம்!” என்று சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, பத்தொன்பதாம் நாள் வழக்கம் போல் ஒரு சமரச அதிகாரியை நியமித்தார்கள்.