பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 63 கடைசியாக நாற்பத்தைந்து நாட்கள் ஆன பிறகு, ஒரு கோடி கெஜம் துணிக்குமேல் நஷ்டமான பிறகு, பதினாலாயிரம் பேர் அரைப் பட்டினி கிடந்த பிறகு, பக்கிங்காம்-கர்நாடிக் ஆலைகள் திறந்தன. தொழிலாளி களும் வேலைக்குத் திரும்பினார்கள். வேலை நிறுத்தம் முடிந்தபிறகு, தம்மைப் பேட்டி கண்ட பக்கிங்காம் - கர்நாடிக் தொழிலாளர் தலைவரிடம், பிரதம மந்திரி பிரகாசம் என்ன சொன்னாராம், தெரியுமா? "நீங்கள் எந்தக் கட்சியையும் சேராதவர் என்று இதுவரை எனக்குத் தெரியாது; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக்கும் என்று நினைத்து இத்தனை நாட்கள் சும்மாயிருந்து விட்டேன்!" என்றாராம்! இது உண்மையானால், கட்சிச் சண்டையின் காரணமாகக் கனம் பிரகாசம் தொழிலாளிகளைப் பழி வாங்குவது அநீதியாகும்.