பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 73 பேராசையை எதிர்த்துப் போராடுவதற்கு அவனிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதமான வேலைநிறுத்த உரிமையைப் பறிப்பதற்கும் முயற்சி செய்வது நல்லது.மல்ல; நன்மை பயப்பதுமல்ல. தொழிலாளிகளின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசியல் விடுதலைப் போராட்டங் களைப் போன்றவை யல்ல; அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்காக எழுந்த போராட்டங்களாகும். அவை தொடங்கிவிட்டால் என்றும் பின்னடை வதில்லை. ஏனெனில், அவற்றை நடத்தும் சக்தி எந்தத் தலைவரின் கையிலும் இருக்காது தொழிலாளரின் கையில்தான் இருக்கும். ஆகவே, தலைவர்களின் தயவில்லாமலே மேற்கூறிய போராட்டங்கள் போதிய வளர்ச்சியை அடைந்துவிடும். வேண்டுமானால் தலைவர்களையும் தானே உண்டாக்கிக் கொண்டுவிடம். தபால் ஊழியர்களும் ரயில்வே தொழிலாளி களும் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்த போது, சர்க்கார் அவர்களுக்கும் குறைவாகச் சம்பளம்