பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வேலை நிறுத்தம் ஏன்? காத்துக் காத்துப் பார்த்தாள் முத்தாயி, தண்ணிருக்குப் போன மகனைக் காணவே காணோம் - "சரி, இட்டிலியைச் சாப்பிட்டு வைப்போம்: தண்ணிர் வரும் போது வரட்டும்!” என்று தட்டை எடுக்கத் தரையைத் தடவினாள் - அதையும் காணோம்! "இங்கேதானே வைத்து விட்டுப் போனான், எங்கே போயிருக்கும்?' என்று மறுபடியும் தடவினாள் - இல்லை, இல்லவே இல்லை. ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது, யாரோ இருமிக் கொண்டே சிரிக்கும் சத்தம் அவள் காதில் விழுந்தது. அந்தச்சத்தத்திலிருந்து ஆளை இனங் கண்டு கொண்டு, "ஏன் ஆரோக்கியசாமி. இங்கே இருந்த இட்டிலியைப் பார்த்தாயா?" என்று கேட்டாள் முத்தாயி, "பார்த்தேன், பார்த்தேன்!" என்று அவளுக்குத் தெரியாமல் அந்த இட்லிகளை எடுத்துக் கொண்ட அவன், அவற்றைப் பிட்டுப் பிட்டு விழுங்கிக் கொண்டு இருந்தான்! விஷயத்தைப் புரிந்துகொண்ட முத்தாயி அவனுடன் சண்டை பிடிக்கவில்லை; போலீஸாரைக் கூப்பிட்டு அவனை ஒப்படைக்கவும் இல்லை - "ஐயோ பாவம், ரொம்பப் பசி போலிருக்கிறது - சாப்பிடு,