பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8() வேலை நிறுத்தம் ஏன்? "அந்த வம்பெல்லாம் நமக்கெதுக்கு? - நீ வா!' என்றாள் அவள், 'இந்த மனோபாவத்தைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்!" "அதற்காக... ?" "அவர்களைப்போல நாமும் திருடர்களாக மாற வேண்டும். எனக்கென்னமோ பிச்சை எடுப்பதை விட அதுதான் மேலெனத் தோன்றுகிறது." "ஐயோ, வேண்டாம் கண்ணு - ஒருவர் பொருளை ஒருவர் திருடுவது பாவம்' 'புண்ணியத்தைக் கண்டால்தான் பாழும் பொருள் ஒட்டம் பிடிக்கிறதேம்மா!" 'அதனால் என்ன? ஆண்டவன் கூடவா நமது பங்கில் இருக்க மாட்டார்?" "ஏன் இல்லாமல்? - இல்லாவிட்டால் பிச்சை எடுத்துத் தின்ன உபயோகமாயிருக்கட்டுமென்று உன் கண்களைப் பறித்திருப்பாரா?" "பலே பலே, அப்படிச் சொல்லு!" என்று இந்தச் சமயத்தில் உற்சாகம் மிக்க ஒரு குரல் கேட்டது. ரத்தினம் திரும்பிப் பார்த்தான்.