பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 33 "ஆமாண்டா அவள்தான் குருடி உனக்குத்தான் கண்ணிருக்கே - நீ பார்த்துப் போவதற்கு என்ன கேடு?" என்று அவன் கன்னத்தில் அறைந்தான் ரத்தினம். அதற்குள் ஏதோ ஒரு செய்தி அவன் உள்ளத்தைத் துள்ள வைத்தது. உடனே ரத்தினம் அடித்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் அவனுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, "ஓ.கே! இதோ பார், இன்றே நான் பிரேமலிலா பிக்சர்ஸ் டிரைவராவேன்; அப்புறம் நடிகனாவேன்; அதற்குப் பின் படாதிபதியாவேன்!" என்று பைத்தியக்காரனைப் போல உளறிக்கொண்டே அவன் எடுத்தான் ஒட்டம்! இரண்டாம் அத்தியாயம் “பிரேமலிலா பிக்சர்ஸ்” 'அப்பப்பா! 'டிரைவர்கள் தேவை' என்று பத்திரிகையில் ஒரு வரி போட்டாலும் போட்டு விட்டார், விடிந்ததும் விடியாததுமா யிருக்கும்போதே எல்லாரும் வந்து என் உயிரை வாங்குகிறார்களே!' என்று அலுத்துக் கொண்டே வந்தவர்கள் அனை வரையும் விளலிட்டர் ஹாலில் உட்கார வைத்துவிட்டு வெளியே வந்தான் ப்ரொடக்ஷன் மானேஜர்' பீதாம்பரம். அப்போது பத்து முழம் சேலையைப் பட்டும் படாமல் கட்டுவதைக்கூடச் சிரமமாகப் பாவிக்கும்