பக்கம்:வேளிர் வரலாறு.djvu/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாக முன்பு வெளிவந்த தாகலின், சங்கத்தார் விருப்பத்தின்படி. "செந்தமிழ்ப்பிரசுரங்' களில் ஒன்றாக இது வெளியிடப்பெற்றது. இவ்வியாசத்தே, பழைய வேளிருடைய வரலாறுகளை ஆராய்ச்சி செய்ததின் பயனாக ஏற்பட்ட கொள்கைகளைக்கூறுதலே என் நோக் கமன்றி, சாதிபற்றிய எவ்வழக்கிலும் பிரவேசிப்பது என் கருத் தன்று என்பதை அறிஞர்க்கெல்லாம் வற்புறுத்த விரும்புகிறேன். இந்நூலுட் காணப்படும் கொள்கைகள் சில, காலாந்தரத்திற் கிடைக் கும் சாதனங்களால் மாறுபடுதலுங் கூடும். ஆதலால் ' என் கூற்றெல் லாம் முடிபு' என்று ஒருதலையாகச் சாதிக்கவந்தவனு மல்லேன். அதனால், "குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் - கற்றறிந்த மாந்தர் கடன் ” ஆகும். இராமநாதபுரம். ) இங்ஙனம், 10-1-13. மு. இராகவையங்கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/11&oldid=990561" இலிருந்து மீள்விக்கப்பட்டது