பக்கம்:வேளிர் வரலாறு.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஓ

N

4 = htS பப்பப்பரி கை ய F ( 11 ப்ப்ப்ப்ப்ப வரும் 3 rt 4 ப்பரி வேளிர் வரலாறு செந்தமிழ் வளர்த்த பெருமையிற் சேர சோழ பாண்டியர்க்கு எவ்வளவு பாகமுண்டோ , அதற்கு அதிகமில்லாமற்போயினும், அவ ரளவு சம்பாகம் பெற்று நின்ற ஒரு பெருங்கூட்டத்தார் முற்காலத்தே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தனர் எனின், அது சிலர்க்கு வியப்பா கத் தோற்றலாம். ஆனால், பழைய நூலாராய்ச்சியுடைய செந்தமி ழறிஞர்க்கு அது சிறிதும் வியப்பன்று. பண்டை யிலக்கியங்களை ஆராயுமிடத்து, மூவேந்தர் படைத்த தமிழ்ப்பெருமையளவு தாமும் படைத்து நின்ற ஒரு கூட்டத்தார் தமிழகத்தே விளக்கமுற்றிருந்த செய்தி வெளியாகும். இன்னோர் தாம் வேளிர்* என்றழைக்கப்படு வார்கள். இரவாமலீந்த கடையேழு வள்ளல்களிற்+ பலர் இவர்களே. கொடுக்கிலா தானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை”! என்னும் திருவாக்கில், வள்ளன்மைக்கே ஓரெல்லையாக வைத்துப் பாராட்டப்பெற்றவன் இவருள் ஒருவனேயாவன். வரையாவண்மை யால் தானடைந்த ஒப்பற்ற புகழைக்கண்டு மூவேந்தரும் அழுக் காறுகொள்ளும்படி நின்ற இப்பெருவள்ளல் விளங்கியது வேளிர் குலமெனின், அதற்கு வேறொரு பெருமையும் வேண்டுமோ?

  • வேளிர், வேள் என்பதன் பன்மைச்சொல்: கேள் கேளிர் என்றாற்போல.
  • பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்ற எழுவர். (புறம்.

கருது; சிறுபாண் - அடி. அச- கஉ.உ. ) + ஸ்ரீ: சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம். $ இவன் வேள் - பாரியாவன்; இவனது வள்ளன்மையால் உண்டாகிய பெரும்புகழ், தமிழரசராகிய சேர சோழ பாண்டியரது கீர்த்திகளையுங்கீழ்ப்படுத்து மேம்பட்டதனால் அழுக்காறுகொண்ட அவ்வரசர்கள், தம்மிற்கூடி அவ்வேளின் பறம்புமலையை முற்றுகையிட்டு, அவ்வள்ளலையும் வஞ்சத்தாற் கொன்றனர். இச்சரிதவிரிவை, இந்நூலுள் வேள் - பாரி என்ற தலைப்பின் கீழ்க் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/17&oldid=990585" இலிருந்து மீள்விக்கப்பட்டது