பக்கம்:வேளிர் வரலாறு.djvu/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. இங்ஙனம் புகழ்வாய்ந்த குலத்தவரின் வரலாறு பற்றி நம்மவராற் சிறப் பாக ஆராய்ந்தறியப்பட்டவை இதுவரை இல்லையென்றே சொல்ல லாம். செந்தமிழரசர் என்ற அபிமானத்தாற் சேர சோழ பாண்டி யாது வரலாறுகளை அறிவதிற் றமிழ்மக்களால் எத்துணை ஊக்கங் காட்டப்படுகின்றதோ, அதனிற் சிறு பகுதியேனும் இவ்வேளிர் விஷ யத்தினுங் காட்டுதல் நம்மவரது பெருங் கடமையன்றோ . ஆனால், இம்முயற்சியில் இறங்கத்தக்க கருவிகள் கிடைப்ப தரிதென்று சொல் லக்கூடும். வேளிரது பரம்பரை வரலாறுகளை எழுதிவைத்த பழைய நூல்களேனும் சாதனங்களேனும் கிடையாவென்பது உண்மையே. இப்போது காணப்படுவதெல்லாம், புறநானூறு முதலிய சிலபழைய தமிழ் நூல்களிற் புலவர்கள் அவ்வப்போது பாடிப்போந்த ஒரு சில செய்யுட்களேயாம். இச் சிலவற்றைக்கொண்டு வேளிர் வரலாறெல் லாந் தெரிதல் எங்ஙனங் கூடும்? எனினும், வேளிர் வரலாறாகிய இரு ண்ட களஞ்சியத்தே, கையிலுள்ள இச்சிறுவெளிச்சங்களைத் துணைக் கொண்டு கூடியவளவு நாம் துருவுவோம். அங்ஙனந் துருவி நோக் குவதிற் றெரிகின்றவற்றைத் தமிழ்மக்கட்கு வெளியிட முயல்வோம். பழைய சங்க நூல்களிலே, வேளிர் என்ற ஒரு கூட்டத்தார், தமிழ்ப் பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியரை அடுத்துப் பல விடங்களிலுங் கூறப்படுகின்றனர்; இதனை :-"பண்கெழு வேந்த ரும் வேளிரும்” எனப் புறநானூற்றினும், இருபெரு வேந்தரொடு வேளிர்” என மதுரைக்காஞ்சியினும், 'வேந்தரும் வேளிரும்" எனப்; பதிற்றுப்பத்திற் பலவிடங்களிலும் வருதலால் அறியலாம். இத னால், மூவேந்தரையுமடுத்து முற்காலத்தே தமிழ்நாட்டில் மதிக்கப், பட்ட சிற்றரசருள், இவ்வேளிரே முற்பட்டவர் என்பது விளங்கும். அன்றியும் தொன்முதிர் வேளிர்” (அகம் - உரு அ; புறம் - உச) நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிர்” (புறம் - உலக)"இருங் கோவேள் மருங்கு" (பட்டினப்பாலை) எவ்விதொல்குடி” (புறம் - உ02) என நூல்களிற் காணப்படுதலின், இன்னோர் பண்டைக்கால முதலே தமிழ்நாட்டில் விளங்கியிருந்தவர் என்பதும் தெளியப்படு கின்றது. இனி, இவ்வேளிர் யாவர்? இவர் குலம் யாது? இவர் தமிழ்நாட் டின் பழைய மக்களா? அன்றி இடையில் வந்தேறியவரா? இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/18&oldid=990584" இலிருந்து மீள்விக்கப்பட்டது