பக்கம்:வேளிர் வரலாறு.djvu/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட் டிற் குடியேற்றினர்' என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத் தியனார் தென்னாடு புகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல் லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனி வர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட் டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தி யே, 'வேந்துவினையியற்கை” என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும் -இது, மலயமா தவன் நிலங்கடந்த நெடுமுடி யண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப் பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது” (பொரு ௗதி - கூஉ) என, மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட் டுளது. இப்பிற்கூற்றிலே, முன்குறித்த தொடரிற்கண்ட அருவாளரை யொழித்து, ஒழிந்த நாபதியருடன் கூடிய வேளிரே கண்ணன் வழி யினரெனவும், அவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தனர் என வும், அவரெல்லாம் அரசுரிமை எய்தற்குரியவரெனவும் குறிக்கப் படுதல் காணலாம். இவ்வாறு, வேளிரைப்பற்றிய வரலாற்றை நச்சி னார்க்கினியர் ஒருமுறைக்கு இருமுறை எழுதுதலால், அஃது ஏதோ ஒரு பிரமாணம்பற்றியே அவர் காலத்து வழங்கியிருத்தல் வேண்டு

  • ஸ்ரீவியாஸபாரதம், ஸபாபர்வம், கச-ம் அத்யாயத்தில், ஜராஸந்தன்விஷ

யமாகக் கண்ணபிரான் யுதிஷ்டிரருக்குக் கூறிவருமிடத்து-"ராஜாவே! ஜரா ஸந்தன் எதிர்த்தலாற் கரைகடந்த பயம் எங்கட்கு நேர்ந்தபோது, நாங்கள் பதி னெண்குலத்தோர்கள் சேர்ந்து இவ்வாலோசனை செய்தோம்" என்று, இரு முறை குறிப்பிடுதலால், யாதவர் பதினெண்வகைக் குடியினராயிருந்தமை தெளிவாகின்றது (ஸ்ரீ ம. வீ. இராமானுஜாசாரியாவர்கள் பதிப்பித்துவரும் வியாஸபாரதம் தமிழ்மொழிபெயர்ப்புப் பார்க்க.) ஸ்ரீமத் பாகவதத்தில், இவர்கள் ஐந்து குலமாகவும், காக-கிளைகளாகவும் கூறப்படுவர். (தசமஸ்கந்தம்; அத்-க, கர்)

  • முன்குறித்த வாக்யத்தில், 'அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி

வேளிருள்ளிட்டாரையும்' என வேறு வேறாகக் குறிக்கப்பட்டிருப்பினும், இவ் வாக்யத்தில் 'நரபதிய நடன்கொணர்ந்த கஅ-குடிவேளிர்' என வருவதனால், அந்நரபதிகள் வேளிருடைய தலைவர்களே என்பது பெறப்படுகின்றது. வேளிர் பதினெண்வகையின ரானமைக்கேற்ப, அவர ரசரும் பதினெண்மராயினர் போ லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/20&oldid=990582" இலிருந்து மீள்விக்கப்பட்டது