பக்கம்:வேளிர் வரலாறு.djvu/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே" எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (உலக) காணப்படுகின் றன. இதன்பொருள்:- நீ தான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை- என்பதாம். இப்பழைய மேற்கோளால், வேளிரென்பார் துவாரகையினின்று வந்து தென்னாடாண்ட சிற்றரச வகுப்பினர் என்பது மட்டில் நன்கு விளங்கிற்று; விளங்கவே, மேற்கூறிப்போந்த நச்சினார்க்கினியர் செய்திகளிலே, சிறந்ததொன் றற்குப் பிரபல ஆதாரங் காணப்பட்டதாம். இனி, வேளிர் துவாரகையினின்று வந்தேறியவர் என்பதற்கு இலக்கியமுள்ளதாயினும், அவர் யாதவகுலத்தவரென்பதை விளக்க வல்ல பிரமாணங்களை முன்னூல்களினின்று அறிதல் இப்போது அரி தாம். ஆயினும், யது வமிசத்தோர் ஆதியிற் கங்கைபாயுந் தேசங்க ளிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களாற்* றுன்ப முறாது வாழ்தல் வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நியமித்து, அதனைச் சூழ்ந்துகிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண் ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரக்ஷ கராகநின்று உ..தவிவந்தனர் என்ற செய்தி புராணே திகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ண பிரான் தன்னடிச்சோதிக்கும் எழுந் தருளுங்காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங்

  • ஜராஸந்தன் முதலியோர்.

1 பரமபதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/22&oldid=990580" இலிருந்து மீள்விக்கப்பட்டது