பக்கம்:வேளிர் வரலாறு.djvu/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. றது” என்று ஸ்ரீ தத்தர் எழுதியிருக்கக்கூடாதோ எனின், இது வரை இக்கொள்கைபற்றி எவரும் வரைந்திருப்பதாகத் தெரியாமை யால், அங்ஙனஞ் சொல்வதற்கில்லை. ஆதலின், அச்சரித்திராசிரியர், தென்னாட்டிற்போல வடநாட்டும் வழங்கும் ஏதோ ஒரு கர்ண பரம் பரைச் செய்தியைப்பற்றிக்கொண்டு தம்.ஆராய்ச்சியிற் றோற்றியதை எழுதினர் என்பதே முறையாம். ஆகவே, நச்சினார்க்கினியர் எழுதிய செய்திகளில் மற்றொன்றற்கும் வடநாட்டுப் பண்டிதரொரு வர் சம்மதமளித்தலின், கண்ணன் வழியினர் பலர் தென்னாட்டுக் குடிபுக்கவரலாறு ஒருபடியாக நிரூபணமாகின்றது. இனி, வேளிர் என்பவர் யாதவகுலத்தவரே என்பதைக் குறிக்க வல்ல வேறுபல சான்றுகளும் காணப்படுகின்றன. அவற்றை ஒவ் வொன்றாக இனி எழுதுவோம். ஏறக்குறைய, தொள்ளாயிரம் வரு ஷங்கட்கு முன் மைசூர் நாட்டை அடிப்படுத்து, அந்நாட்டிலுள்ள துவாரசமுத்திரம் என்ற நகரத்திருந்து ஆட்சிபுரிந்தவர் ஹொய்சள்- யாதவர் என்பதைப் பலர் தெரிந்திருக்கலாம். * இவ்வாசர், ஆதியிற் கூர்ச்சரநாட்டுத் துவாரகையினின்று குடியேறியவரென்பதும், யா தவ குலத்தவரென்பதும் சரித்திர பூர்வமாக அறியப்பட்டவை. இவ் வாறு வந்தேறிய யாதவத்தலைவர், கன்னடபாஷையில், பேலாலர் என வழங்கப்படுகின்றனர். தமிழர் வழங்கும் வேளாளர் என்ற சொல் லோடு இப்பேலாலபதம் பெரிதும் ஒற்றுமை பெறுதல் ஆராயத்தக் கது. அன்றியும், இப் பேலால-யாதவர் காலத்தே உண்டாகிய தலை நகரொன்று, வேளுர் அல்லது வேளாபுரம் என அவர் பெயரால் வழங் கப்பட்டுள்ளது. இதனால், கன்னடவடி.வில் அவ்யாதவர் பேலாலர் என வழங்கப்பட்டிருப்பினும், அச் சொல்லின் உண்மையுருவம் வேளாளர் எனத்தெரிதலோடு,வேள் என்ற பெயரும் அவர்க்கு முன்பு வழங்கிவந்த தென்பதும் அறியப்படும். ஸ்ரீமத் - வி. கனகசபைப் பிள்ளையவர்களும்-மைசூர்ப் பேலாலரையும் தமிழ் வேளாளரையும்

  • இவ்வரசரைப்பற்றிய சரித்திரக்குறிப்பை, Lewis Rice துரையவர்கள்

எழுதிய "Mysore Gezetteer" என்ற நூலில், "Historical Period” என்ற தலைப்பின் கீழ் அறியலாம்.

  • இஃது இப்போது ஹாலபீடு என வழங்கப்படுகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/24&oldid=990578" இலிருந்து மீள்விக்கப்பட்டது