பக்கம்:வேளிர் வரலாறு.djvu/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. சாளுக்கியரைப் பண்டைத் தமிழ் நிகண்டுகள் வேள்புலவரசர் என்று கூறுகின்றன; இதனை-'வேள்புல அரசர் சவக்குவேந்தர் ”* எனத் திவாகரத்தும், பிங்கலத்தும் வரும் சூத்திரத்தால் அறியலாம். இவற் றுள், திவாகரத்தில், அச்சளுக்கரது கொடி வாாகமென்பதைக் கேழல்வேள்புல வரச கொடியே” என்ற சூத்திரங்கூறுகிறது. இத் திவாகரம் பாடுவித்த அம்பர் க ழான் - சேந்தனார், கடைச்சங்கத்தவ ரான ஒளவையாரால் பாடப்பெற்றவர் என்பது, அந்நிகண்டின் 'தொகுதியிறுதிக்கட்டுரை 'களானே நன்கு விளங்குதலின், அத் திவா கரமும் அச் சங்ககாலத்தது என்பது சொல்லாதே அமையும். கி. பி. 6-ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட சரூக்கிய-சாஸனங்கள் இப்போது காணப்பட்டிலவேனும், அச்சளுக்கர் பழமைபெ றவர் என்பது, திவாகர முதலியவை அவ்வரசர் பெயரை எடுத்தோதுதலானே தெளி வாகின்றது. இனி, இச் சளுக்குவேந்தரை வேள்புலவரசர் என அந் நிகண்டுடையார் கூறுவதில், வேள்புலமென்பது, அவ்வரசரது புரா தனராஜ்யமாகிய கூர்ச்சரமுதலிய மஹாராஷ்டிரபூமியே என்ப தற்கு, வேண்டிய ஆதாரங்கள் இப்போது காணப்படுகின்றன . பண்டைத் தமிழ்மக்கள் பம்பாய் மாகாணத்தையே வேள்புலமெனக் கொண்டனர் என்ற என் கொள்கை, அம் மாகாணத்துள்ள நகரங்கள் பல வேள் என்ற சொல்லடியாக வழங்கிவருதலால் நிலைநாட்டப்படு கின்றது; உதாரணமாக:-ஸைாம் ராஜ்யத்தைச் சார்ந்து அதன்வட மேற்கெல்லையில் உள்ளதும், பம்பாயின் வடபாகத்தை ஒட்டியது மான எல்லூரா (Ellora) என்னும் பிரபலமான குறிஞ்சி நிலத்து ஊரொன்று உண்டு. இவ்வெல்லூ ரா என்பது, லொபுரம் என்ற வடசொல்லின் திரிபென்பர் டாக்டர் - பண்டாரகர். (Dr. Bandarkar) இதனை ஆக்ஷேபித்து டாக்டர்-பிளீட்துரை (1)". Fleet) அவ்வூர், வேளூர், வேளுரகம் எனப் பழைய சாஸனங்களிற் கூறப்படுதலைத்

  • மக்கட் பெயர்த்தொகு.சி பார்க்க.

+ பல்பொருட் கூட்டத் தொருபெயர்த்தொகுதி-வேள்புல அரசர் கொடி வகைப்பெயர் பார்க்க; இக்காலத்து அங்கங்கே அகப்படும் சிலா, தாமிர சாஸனங் களிலும் "வேணாட்டரசர், வேள் குலச்சளுக்கி எனவும், வராகவெல்கொடி, சூகரக்கொடி னெவும், ச ளுக்கியரது நாடு, குலம், கொடி முதலியவை கூறப்படு கின்றன. (ஸ்ரீ. து. அ. கோபிநாதராயாவர்களது சோழவமிச சரித்திரம், அது பந்தம் II பார்க்க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/27&oldid=990575" இலிருந்து மீள்விக்கப்பட்டது