பக்கம்:வேளிர் வரலாறு.djvu/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க2 வேளிர் வரலாறு. தக்க காரணங்காட்டி நிரூபித்திருக்கின்றார். * இவ்வாறே, பம்பாய் மாகாணத்து ஷோலாபூர் (Sholapur) ஜில்லாவில் ஒரு நகரம் வேளாபுரம் (Velapur) என்ற பெயர் வாய்ந்துளது இன்னும், வேளி ரின் ஆதியிருப்பாகிய கத்யவார் (Kathiawar) கட்சு (Cutch) பிரதே சங்களில் பேலா (Bela) என்ற பெயர் வாய்ந்த ஊர்கள் பலவுள. அங் ஙனமே, அஹமெட்நகர்த் தாலூகாவில் வேளாபுரம் எனவும், பூனா ஜில்லாவில் வேளகம் (Bella) எனவும் நகரங்கள் காணலாம். இனி, அம்மாகாணத்தின் தென்பக்கத்துள்ள முக்கியமானதொரு ஜில்லா வும் நகரமும் பேல்காம் (Belgaum) என வழங்குதலை அறியாதார் அரியர். பேல்காம் என்பது வேள்கிராமம் என அப் பக்கத்துச் சாஸ் னங்களிற் காணப்படுவதெனவும், சளுக்கியரின் சகோதர வகுப்பின ராகிய கதம்பர்க்குத் தலைநகராக அஃது ஓர்காலத்து விளங்கியதென வும் சரித்திர நூலோர் கூறுவர். அப் பிரதேசத்து லஷ்மேச்வரத்தை அடுத்துள்ளதோர் ஊர் வேள்பட்டி (Bellnutti)1 என வழங்கு தலும் அறியத்தக்கது. இங்ஙனமே பம்பாய் மாகாணத்தை ஊன்றி நோக்குமிடத்து, ஆங்குள்ள ஊர்கள் பல, வேளென்ற சொல்லடி யாக வழங்குதலை நன்றாக நாம் காணலாம். ஆகவே, பம்பாய் மாகாண மாகிய வேள்புலத்தினின்று வந்து தென்னாடாண்ட.மைபற்றித் தமிழ்நாட்டார் சாளுக்கியரை 'வேள்புலவரசர்' என வழங்கினர் என் பது பெறப்படுவதன்றோ. எனவே, அவ்வேள்புலத்தினின்றே முற் காலத்துத் தமிழ்நாட்டுக் குடியேறிய வேளிராக ய யா தவரும், பிற் காலத்து அங்ஙனங் குடிபுகுந்த ஹொய்சள - யாதவரும் முறையே வேளிர் எனவும், பேலாலர் எனவும் பெயர்பெற்றதன் காரணமும் அதுவேயாதல்வேண்டும் என்பது தானே பெறப்படத்தக்கது. மேற்கூறியவாறு, சளுக்கியரை வேள்புலவரசர் என நிகண்டு கள் படிப்பதோடு, வேள் என்ற சொல்லே அச்சளுக்கர்க்கு உரிய

  • Bombay Gazetteer, Vol. I, Part. II, pp. 391.

வேள் கிராமமாகிய இவ்வூர், வேணுக்ராமம் என டெமொழியில் வழங்கப் பட்டுள்ளது; இந் நகரத்திலிருந்தாண்ட இக் கதம்பரும் சளுக்கரும் ஆதியில் ஒருகுலத்தவரென்பதை, இந்நூலில் "நன்னன்-வேண்மான் என்ற தலைப்பின் கீழ்க் காண்க. + வகரம் பகரமாகவும், பகரம் ஹகரமாகவும் பாஷாந்தரங்களில் வழங்கும் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/28&oldid=990574" இலிருந்து மீள்விக்கப்பட்டது