பக்கம்:வேளிர் வரலாறு.djvu/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. கங தாகவும் பிங்கலந்தை கூறுகிறது. இதனைத் - "'தாரகாரியுஞ் சளுக்கியர் வேந்தனும்-வேனிலாளனும் வேளென லாகும்”* என்பதனால் அறிக. இங்ஙனம், வேளிர் எனச் சளுக்கரசர் கூறப்படுதற்கேற்ப, மைசூர்ப் பேலால-யாதவரைப் போலவே இவ்வரசரும் யாதவருள் ஒரு வகை யினரே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. சளுக்கருடைய புராதன நாடு கங்கா தீரமாகவும், வமிசம் சந்திரகுலமாகவும்-யாத வர்க்குரிய குடி குலங்களே இவர்க்குங் கூறப்படு தல் காண்க. இனி, கிறிஸ்தவாப்தத் தொடங்குதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே, வடநாட்டிற் பிராபல்யம் பெற்று விளங்கிய ஆந்திர சக்கரவர்த்திக ௗதுர் ஆட்சி, பிற்காலத்தே நிலைகுலைந்தபோது, அவரில் ஏழு பிரி வான அரசர்கள் தக்ஷிணத்தில் ராஜ்யங்கள்ஸ்தாபித்து ஆண்டுவந்தன ரென்றும், சளுக்கரும், விக்ரமார்க்கன் வம்சத்து மாளவ அரசரும், காலசூரிகளும், காகதீய-கணபதிகளும், கொண்டவீடு - கஜபதிகளும், விஜயநகர-யாதவ நரபதிகளும் அவ்வகையினரென்றும் சாஸனங்க

  • பல்பொருட் பெயர்த்தொகுதி.

" மகதநாட்டு ஆந்திர-சக்கரவர்த்திகள் பலர், வடக்கே இமாசலமும், தெற்கே தெலுங்காணமும், மேற்கே மாளவமும், கிழக்கே வங்கமும் எல்லையாகக் கொண்ட ஏகாதிபத்யத்தை(Empire) நாட்டிப் பன்னூற்றாண்டுகள்வரை பெருந் திறமையுடன் ஆட்சிபுரிந்தவர்கள்; இன்னோர், ஆந்திரர் (நேரான அரசர்), ஆந் திர-ஜாதிகர் (அவர் பந்துக்கள்), ஆந்திர-பிருத்யர் (அவர் வேலைக் காரர்) என மூன்று பிரிவாயிருந்தனர். இவர்கள் 2000-ஆண்டுகட்கு முன் பே பிரபலம் பெற்றவர் என்பதற்கு வேண்டிய பிரமாணங்கள் உள்ளன. இந்த சக்கரவர்த்தி களை, அக்காலத்துக் கிரேக்க-பூமிசாஸ்திரிகள் அண்டரிய(Andoria) என வழங் கிவந்தனர். இத்தேசத்துக்கு வந்து சென்ற பழைய யவனாசிரியராகிய பிளை, (Pliny) என்பவர் எழுதிய குறிப்பால், இன்னோர் பரதகண்டத்தே மஹாவீரரா யிருந்தவரெனவும், இவர்கள் வசம் நூற்றுக்கணக்கான பேரரண்வாய்ந்த நகரங்களும், ஆயிரக்கணக்கான பயானைகளும், லக்ஷக்கணக்கான சைந்யங்களும் இருந்தன எனவும் தெரிகின்றன. இம்மஹாவமிசத்தின் வரலாறு, பாகவத - விஷ்ணு மத்ஸ்ய-புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன. இவ்வரசரிற் கடைசியான வன், கி. பி. 3-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த புலோமன் என்பவன். சிலப்பதி காரத்தில், செங்குட்டுவனது வடநாட்டு யாத்திரையில், அவனுக்கு உதவிபுரிந்த "நூற்ற வர் கன்னர் என்பவர் இவ்வாந் திர குலத்தரசரே என்பர்; மற்றம் இன்னோர் வரலாறுகள் சரித்திர நூல்கள் நோக்கி அறியத்தக்கன. + Jainles 1Prinsop's Essays on Indian Antiquities. Vol. II. p. 281.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/29&oldid=990573" இலிருந்து மீள்விக்கப்பட்டது