பக்கம்:வேளிர் வரலாறு.djvu/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. கரு தக்க இவ் வாசர், பிற்காலத்தில் சாளுக்கியர், சளுக்கியர், சளுக்கர், சளுக்கி எனப் பலபடியாகத் திரித்து வழங்கப்பட்டனர்- என உணர்க. பிங்கலந்தையில் வேளிர் என வழங்கப்பட்ட. சளுக்கியரது வரலாற்றைக் குறிக்கும் இக்கதை, புறநானூற்றில் 'வடபால் முனிவன் தடவினுட்டோன்றித்... துவரையாண்டவர்' எனப்பட்ட வேளிர் வர லாற்றுடன் பெரிதும் ஒற்றுமைபெற்று விளங்குதல் அறிந்து மகிழத் தக்கதன்றோ .* இச்செய்தி கபிலர் வாக்கிற் பயின்றுள்ளமை, முன் னரே குறிக்கப்பட்டது. இதனுள்வரும் 'வடபால் முனிவன் தடவு' என்பதற்குப் புறநானூற்றுரைகாரர், 'வடநாட்டு முனிவரது ஓம் குண்டம்' எனப் பொருள் கூறியிருப்பினும், சளுக்க-வேளிருடைய முன்குறித்த வரலாற்றுக்கு இயைய 'யாகபாத்திரம்' என்பதே பொருத்தமாகும். (கடவு-தடா = பாத்திரம்) இங்ஙனம், முனிவர் ரொருவரது தீர்த்தபாத்திரத்திற் றோன்றிய வரலாறும், வேள் என்ற பெயர் வழக்கும் தமிழ்-வேளிர்க்கும் சளுக்க-வேளிர்க்கும் உரியன வாக வழங்குதலால், அவ்விருவரும் ஒருகுலத்தவராதல் விளக்கமாம். இவ் விருவகையார்க்கும் வழங்கும் வேளிர் என்ற பெயர், யாக சமயத்திற்றோன்றிய இவர்களது வரலாற்றைப்பற்றியே வழங்கி யிருத்தல் வேண்டுமென்றுஞ் சொல்லலாம்: என்னை? வேளிரென்பது, யாகஞ்செய்தல் என்ற பொருளுடைய 'வேள்' என்னும் பகுதி யடியாகப் பிறந்த பெயராதலால் என்க."

  • முன் குறித்தபடி, ஆந்திர மரபினர் என அறியப்பட்ட இவ்வேளிர், முனி

வரது யாகசமயத்திற் றோன்றிய அரசனொருவன் வமிசத்தவரென்னும் வரலாற் றைப் புராணே திகாசங்களினின்று உறுதிப்படுத்தல் இப்போது அரிதாம்; ஆயி னும், ஸ்ரீமத் - பாகவதம், நவமஸ்கந்தம், உங-ம் அத்யாயத்தே, - யயாதியின் வழி யிற் பல தலைமுறைகட்குப் பின்வந்த ஸதபஸ் என்பவனுக்கு பலி என்பவன் உண்டானான் என்றும், இப்பலியின் க்ஷேத்திரத்தில் தீர்க்கதமஸ் என்ற முனி வர்க்கு அங்கன், வங்கன், கலிங்கன், சுகன், பவுண்டிரன், ஆந்திரன் என்ற அறுவர் குமாரர் ஜனித்துத் தத்தம் பெயர்களால் முறையே ஆறு ராஜ்யங்களைத் தாபித்தார்களென்றும் கூறப்பட்டுள்ளன. இதனால், ஆந்திரர், பலியென்பா னாற் செய்யப்பட்ட யாகத்தில் முனிவரால் தோன்றியவர் என்ற வரலாறு, புரா ணங்களாலும் ஒருவகையால் ஆதரிக்கப்படுவதென்றே சொல்லலாம். பலி என்ற. அரசன் பெயர், யாகஞ்செய்தவனென்ற பொருள் கொள்ளுதலும் நோக்கத்தக் 'கது. (பலி-யாகம்; அதனைச் செய்தவன் பலியாவன்.)

  • தெலுங்கு நாட்டாராகிய ஆந்திர - யாதவகுலத்தார் சிலர்க்கு பலிஜர்

என்ற குலப்பெயர் இன்றும் வழங்கிவருதல் ஆராயத்தக்கது. (பலி - ஜர்=வேள் வியில் உண்டானவர்.] இதனால், யாகத்திற்றோன்றிய வேளிர் ஆண்ட தேசமாத லால் அது வேணாடு, வேள்புலம் என வழங்கப்பட்டதென்றுங் கொள்ளப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/31&oldid=990601" இலிருந்து மீள்விக்கப்பட்டது