பக்கம்:வேளிர் வரலாறு.djvu/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. இன்னோரது குடியேற்ற முயற்சிக்குப் பேருதவியுருந்தருளியவர் அகத்திய முனிவர் என்பர் நச்சினார்க்கினியர்*. இனி, இவ்வேள்குலத் தோர் தம்மாற் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பிரதேசங்களிற் கோட்டை முதலிய அரண்களைப் பெருக்கித் தம் தலைவரின்கீழ் அமைதியுடன் அமர்ந்து வந்தனர். இங்ஙனம், நாடுகளிற் றங்கியவர்

  • பதிக்குரியோர் ' என்னும் பொருள்கொண்ட கிழார் எனவும், தம்

முயற்சித்திறந்தோன்ற மருதநில மக்கள் எனவும், தம் ஆதிகாட்டி னடியாக வேளிர், வேளாளர் எனவும் பெயர் பெற்றனர். ஆந்திர நாட்டாரும் இன்னோரை (வேண்மார் என்பதன் திரிபாக) வேலமா என்பர். ஆரியவகுப்பினருள் க்ஷத்ரிய-ஜா தியைச் சேர்ந்த இவர்கள், தம் நாடு செழித்தல்கருதி வணங்கிவந்த தெய்வம், ஆரியமக்கள் வணங்கிவந்த தெய்வங்களுள் இந்திரனாவன் : வேந்தன் மேய தீம்புன லுலகமும்” என்றார் தொல்காப்பியனார். (பொருளதி. அகத் திணை. சூத்-ரு.) இவ்வேளாளர், ஆதியிற் கங்கா தீரங்களில் வாழ்ந்த வராதலின், இவர்கள் தம்மைக் ' கங்கா - புத்திரர் ' ' கங்கை - வமிசத் தவர்' எனக் கூறிக்கொள்வர். இவர்களை ஆண்ட சிற்றரசர் வேளிர் அல்லது வேண்மார் எனப்படுவர். இவ்வாறு தமிழகத்துப் புகுந்து குடியேறிய வேளிராகிய யாதவகுலத்தார், ஆதியில் க்ஷத்திரிய வகுப்பினரேயாயினும், பன் னெடுங்காலமாகக் குடியேற்ற முயற்சியிற் சென்றமையாலும், உடல் னொத்த ஆரியக்கூட்டரவின்றித் தமிழ்நாட்டிற் றத்தந் தொழில் வேறுபாட்டால் பிரிந்த மையாலும் தமது புராதன ஆசரணை யைச் சிறுகச் சிறுக நெகிழவிட்டனர். கண்ணபிரான் காலத்தேயே யாதவ குலம், மற்ற க்ஷத்திரிய குலங்களினுந் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட தென்பதும், அரசாளுமுரிமை அக்காலத்தேயே இவர்க்கு அதிக அவற்றைத் தமிழ்வேந்தரும் தலைவரும் அழித்தனரெனவும் தெரிகின்றன. (பதிற்றுப். எக, அவு; பட்டினப்பாலை - உஅக.)

  • தொல்காப்பியப் பாயிரவுரை.
  • யாதவர்க்கு, முற்காலத்தே, சிங்காதன உரிமையின்மையும், அவர்கள் க்ஷத்

ரிய குலத்திற் றாழ்ந்துநின்ற செய்தியும் ஸ்ரீமத் - பாகவதம், சரு, சுஅ-ம் அத் யாயங்களில் முறையே கூறப்பட்டுள்ள விஷயங்களால் அறியப்படுவன. இங் ஙனமே, புராண தாற்பரியங்கூறும் பெரியோரும் -- " யயாதிசாபத்தாலே அபி ஷேக ப்ராப்தியற்று, க்ஷத்ரியரில் தாழ்ந்து வைசியப்ராயரான யது குலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/37&oldid=990595" இலிருந்து மீள்விக்கப்பட்டது