பக்கம்:வேளிர் வரலாறு.djvu/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ வேளிர் வரலாறு. மாக இருந்ததில்லை என்பதும் புராணேதிகாசங்களினின்று தெரித லால், தென்னாட்டுப் புகுந்த வேளிராகிய யாதவர் தம் பழைய மதிப் பைக் காலாந்தரத்தே இழந்ததில் வியப்பில்லையாம். ஆயினும், இவர் களுடன் பிறந்த வீரத்தன்மையும் உறுதிப்பாடும் எக்காலத்தும் இவர் களைக் கைவிட்டொழிந்தில. இங்ஙனம், தமது பெருத்த குடியேற்றத்திற் பலவகைத் தொழிற்றிறங்களிற் சிறந்து நின்ற வேள்வகுப்பார், அவ்வத்தொழில் களை வழிவழியாகக் கொண்டமைபற்றித் தாமும் வேறு வேறு கிளை களாகி மறைந்தனர். இவருள்ளே, தமிழ் நாட்டிற் றம் பழைய மதிப் புடன் பல்கிப்பெருக்த யாதவர் உழுதுண்டு வாழ்ந்த வேளாளராவர். ஆசிரியர் - நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வுரையில் (பொருளதி. கூ0.) அடியில் வருமாறு எழுதுகின்றார்.-" வேளாளர் இருவகை யர் ; உழுதுண்போரும் உழுவித்துண்போரும் என. இவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும் அழுந் தாரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ் சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற் றோன்றி ' வேள் ' எனவும் ' அரசு ' எனவும் உரிமையெய்தினோ தோன்றிய வசுதேவர்க்கும், கோவைசியரான நந்தகோபர்க்கும் புத்ரனாகிய கண்ணபிரானாக முன்றம் யுகத் த லே மூன்றாம் வருணத்தில் ஸர்வேசுவரன் அவதரித்தான் ” .... என்று கூ., 2 தலும் நோக்கத்தக்கது. (ஸ்ரீ: வை. மு. சட சோபராமாநு! ஜாசாரியர் இயற்றிய சடகோபரந்தாதி எக-ம் பாட்டுரை பார்க்க.) இதனால், வைரியகுலத் தா ராக யாதவர் முன்பு கருதப்பட்டமை விளங்கும்.

  • மனுஸ்மிருதி க0-ம் அத்யாயம், சங, சச-ம் சுலோகங்களில் (உபநயன

முதலிய) கர்மலோபங்களாலும், பிராமண தர்சனமின்மையாலும் (- அஃதா வது, வைதீக லெளகீக - ஆசார வியவகாரங்களிற் பிராமணருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளாமையாலும்) சூக் ர நிலைமைக்கு இவ்வுலகத்தே தாழ்ந்துவிட்ட 12 - க்ஷத்ரிய வம்சங்களில் திராவிடரும் ஒருவராகக் கூறப்பட்டுள்ளனர். இதனை நோக்கும்போது, யாதவ - க்ஷத்ரியராய்த் தென்னாடாண்ட வேளிர் போன்றவரது முற்கால நிலையை நோக்கி இவ்வாறு கூறப்பட்டதோ என்று தோற்றுகிறது. ஸ்ரீ வியாச பாரதம், சபாபர்வம், கசு -ம் அத்யாயத்தில், பரசு மாமாது கொடிய க்ஷத்ரியவதத்துக்கு அஞ்சி ஓடியொளித்த அரசர் பலர், தங் குலதர்மங்களை விட்டமையாலும் பிராமண தர்சனமின்மையாலும், சூத்திர ப்ராயர் ஆயினரென்றும், அவரில் திராவிடரும் ஒருவர் என்றும் கூறப்படுதலும் காண்க. இதற்கேற்ப, க்ஷத்ரியனாகிய காந்தமன் என்ற சோழன், பரசுராம ருக்கு அஞ்சிப் பொதியமலையில் அகத்திய முனிவர்பால் அடைக்கலம் புக்க செய்தி மணிமேகலையில் வருதலும் அறிந்துகொள்க. (காதை - உஉ; அடி உரு-சO.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/38&oldid=990594" இலிருந்து மீள்விக்கப்பட்டது