பக்கம்:வேளிர் வரலாறு.djvu/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - ஆய். இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய கடையேழு வள்ளல்களில் ஒருவன் என்பது - கரு அ-ம் புறப்பட்டாலும், சிறுபாணாற்றுப் படை யாலும் நன்கு விளங்குகின்றது. இவ்வேளைப்பற்றிய சரித்திரமுழு தும் தெரியவிடமில்லையேனும், இவன் விஷயமாகப் பழைய நல் விசைப்புலவர் பாடிய செய்யுள்கள் இவ்வள்ளலது வரலாறுகள் சில வற்றை அறிதற்கு உதவியாயிருத்தலோடு, இவனது அரிய குண விசேடங்களையும் பெரிய கொடைச்சிறப்பையும் இக்காலத்தார்க்குப் புலப்படுத்துகின்றன. இவ்வள்ளல் வேளிர் குலத்தைச் சேர்ந்தவ னென்பது, 'மாவேள் ஆய் ' தேர் வேள் -ஆய்' எனப் புறநானூற் றில் வருதலாற்றெரியலாம். அந்நூலில் "கழ்றொடி ஆஅய்மழை தவழ் பொதியில் ” எனவும், "தென்றிசையாய்குடி ” எனவும் கூறப்படுத லின், ஆய்நாடு பொதிய மலைப்பக்கத்து உள்ளதென்பதும், அவன் தலைநகர் ' ஆய்குடி.' எனப் பெயர்பெற்ற தென்பதும் விளங்கும். இவன் மலை வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடையதென் பர் ; "' கழறொடி யா அய் மழைதவழ் பொதியில் - ஆடுமகள் குறுகி னல்லது - பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே ” எனக் காண்க. இவனாட்டில் கவிரம் என்னும் மலைப்பகுதியில் இனிய பல சுனைக ளுண்டென்றும், சூரரமகளிர் பலர் அதில் வாழ்வதாக ஐதிகமிருந்த தென்றும் தெரியவருகிறது. இதனை- தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய உருகெழு கவாஅன் ஏர்மலர் நிறைசுனை யுறையும் சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே.” (அகம் - ககஅ ) என்னும் அடிகளிற் காண்க. ஆய்நாட்டில் யானைகள் மிகுந்த காடுகள் உண்டென்றும், பரிசிலர்க்கு யானைக் கொடை. மிகுதியாக அளித்து வந்தவன் இவ்வள்ளலென்றும் தெரிகின்றன இங்ஙனம், இவனது யானைக் கொடையின் மிகுதியை நோக்கி, ஒருபுலவர் விளங்கு மணிக் கொடும்பூண் ஆஅய்நின் னாட்டு- இளம்பிடி. ஒருசூல் பத்தீனும் மோ ” என்று நயப்பக் கூறுதலுங் காண்க. இவ்வள்ளலுக்கு "அண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/44&oldid=990588" இலிருந்து மீள்விக்கப்பட்டது