பக்கம்:வேளிர் வரலாறு.djvu/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - ஆய்.., டிரன்" என்னும் மற்றொரு பெயரும் உண்டென்பது, இவனைப் பற்றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம். புறநானூற்று - உரை காரரும், 'அண்டிரன் - ஆய்க்கு ஒரு பெயர் ' என்பர். இவ்வண் டிரன் என்ற பெயர் வழக்கின் காரணம் முன் வேளிர் வரலாற்றினுள் விளக்கப்பட்டது.* புறப்பாட்டில், ஈகையரிய இழையணிமகளிர் ” கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு ” என வருதலால், ஆய் மகளிர் பலரை மணம்புரிந்தவனென்பது அறியப்படும். இவ னுக்குரிய மாலை சுரபுன்னை ஆகும். இவ்வள்ளல், தன் பெருங் கொடைக் கேற்ப, இன்சொல்லே தன்சொல்லாகப் படைத்தவனென் பர். இவ்வேளிர் தலைவன், கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து, அவரை மேல்கடற் பக்கத்தே ஓட்டினவனென்று, கஙO-ம் புறப் பாடல் அறிவிக்கின்றது. இவன், ஒருகால், நீலநாகமொன்றால் அளிக்கப்பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடையைச் சிவ பிரானே அணியத்தக்கதென்று கருதி, அபிரானுக்கு உவந்து சாத் தினன் என்று சிறுபாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான். இதனை, நீல நாகம் நல்கிய கலிங்கம் + ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆய்.” (கூசா - கூக) என்பதனால் அறிக. இவ்வரலாறு, ஆய், சிவபத்தி மிக்கவன் என் பதை நன்கு விளக்குவது. இவ் வள்ளலின் நாளோலக்கம் மிகச் சிறந்து விளங்கும் என்பர். (நற் - கூ0) இப்பெருந்தகையைப் பாடிய புலவர் பெருமக்கள் உறையூர் ஏணிச்சேரி - முடமோசியார், துறை யூர் - ஓடைகிழார், குட்டுவன் - கீரனார் என்போர். இவருள் முட மோசியார் அந்தணரென்பது தொல்காப்பிய மரபியலுரையால் (சூத் - எச) அறிந்தது. இம்மோசியாரே, வேள்- ஆயின் அருமை பெருமை களை அதிகமாக வெளியிட்டவர். வேள் - பாரிக்குக் கபிலர்போலவும்,

  • வேளிர் வரலாறு, கசு -ம் பக்கம் பார்க்க.
  • நாகங்களின் புணர்ச்சிக்காலத்து அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை

மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/45&oldid=990587" இலிருந்து மீள்விக்கப்பட்டது