பக்கம்:வேளிர் வரலாறு.djvu/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - ஆய். கூக என்னும் இனிய பாடலைக் கூறினார். யானைகளை மிகுதியாகவுடைய இவ்வழகிய காடு, அண்டிரனுடைய (ஆய்) மலையைப் பாடிப் பரிசில் பெற்றது கொல் என்பது இதன் கருத்து. ஆயின் யானைக்கொடை, காட்டியானைகளைக் கண்டதும் தம் மனதில் தோன்ற, அப்போது தானே சுரந்தெழுந்த பாடல் இஃதென்பது அறியலாம். இன்னும், மோசியார் ஆயின் ஒப்புயர்வற்ற கொடைத் தூய்மையை- இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅய் அல்லன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே” என்ற பாட்டாற் குறித்தனர். இவ்வுலகில் அறங்கள் செய்யின் அவை மறுமைக்கு கவுமென்று மறுபயன் பெறும் எண்ணத்துடன் தருமவியாபாரஞ் செய்யும் வாணிகனல்லன் ஆய் ; அவனது கொடை, பெரியோர்கள் சென்ற வழியென்று உலகோர் கருதும்படி அமைந் தது” என்பது இப்பாட்டின் போந்த பொருள். இனி, அம்மோசி யார் மற்றோரிடத்தில், வடதிசை யதுவே வான்றோ யிமயம் தென்றிசை ஆஅய் குடியின் றாயிற் பிறழ்வது மன்னோவிம் பூமலர்தலை யுலகே" என இவ்வள்ளல் உலகிற்குபகாரப்படும் சிறப்பைப் புகழ்வர். இவ் வடிகளில் அமைக்கப்பட்ட கருத்து, பொதியில் மலைக்குரிய அகத்தி யர்க்கு வழங்கும் புராணகதையடியாக உண்டாயிருத்தல் வேண்டும்' " இவ்வாறு, "' ஆடுநடைப் புரவியுங் களிறுந் தேரும் - வாடா யாணர் நாடு மூரும் - பாடுநர்க் கருகா ஆஅய் அண்டிரன் ” பெரு வள்ளலாய் உலகோர் தன்னை என்றும் நினைக்கும்படி விளங்கி, பின் 'காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப - மேலோருலக மெய்தினன் '. இவ்வள்ளல் பிரிவிற்காற்றாது, இவனதுரிமை மனைவியர் தீப்பாய்ந்து உயிர்விட்டொழிந்தனர். ஆய் இறந்தபோது அவனது பிரிவுக் குப் பெரிதும் இரங்கிப் பாடிய புலவர்கள், உறையூர் ஏணிச்சேரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/47&oldid=990615" இலிருந்து மீள்விக்கப்பட்டது